220
அப்பாத்துரையம் - 5
கட்டடக் கலை (Architecture)
கிருஷ்ணதேவராயர்க்கு முற்பட்ட பேரரசர் தம் நாட்டை முஸ்லிம்களிடமிருந்து காப்பதிலேயே தம் காலத்தைக் கழித்தனர்; ஆதலின், புதிய கட்டங்கள் பலவற்றைக் கட்டவோ, கலைகள் வளர்க்கவோ அவர்கட்கு ஓய்வு ஏற்படவில்லை. ஆனால் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் பிற்பகுதி அமைதி நிறைந்தது. அதனால் அவர் பல கோவில்களைக் கட்டினார். அவற்றில் அவர் காலக் கட்டக் கலையையும் சிற்ப-ஓவியங்கலை வளர்ச்சியையும் வளமுறக் காணலாம். அவர் கட்டிய ஹஸார இராமசுவாமி கோவில், விஜயநகரப் பேரரசின் காலத்துக் கட்டடக்கலை உயர்வுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.2 கட்டடக்கலை வளர்ச்சியை அறிவிக்கும் மற்றொரு கோவில் கிருஷ்ணதேவராயர் கட்டிய விட்டலசுவாமி கோவில் ஆகும்.
விட்டலசுவாமி கோவிலின் கருவறை, நடுமண்டபம், முன் மண்டபம் என்பன உயரமான தளத்தின் மீது அமைந்தவை. கோவிலின் திருச்சுற்றுத் தாழ்ந்த தளத்தின்மீது அமைந்துள்ளது. திருச்சுற்றுச் சதுரமானது. திருச்சுற்றின் சில பகுதிகளில் வெளிச்சம் உள்ளே வர வச வசதி செய்யப் பட்டிருக்கிறது. திருச்சுற்றுக்கு வர இரண்டு வழிகள் உண்டு. திருச்சுற்றில் விட்டல சுவாமிக்குரிய 'கல்தேர்’ இருக்கின்றது.
திருச்சுற்றுக்குமேல் உள்ள கட்டட அமைப்புக் காணத்தக்கது. அதனில் ஹொய்சளரும் பாண்டியரும் யானை உருவங்களை அமைத்தனர். ஆனால் கிருஷ்ணதேவராயர் போர்ச்சுகீசிய குதிரைச் சேவகர், அவர்தம் குதிரைகள் உருவங்களை அமைத்தனர். இது காலத்திற்கேற்ற சீர்திருத்தமாகும்.
க்கட்டடத்திற்கு மேற்பட்டது 'உபானம்' என்பது. உபானத்தில் பலவகைப் பூக்கள், பறவைகள், கட்டங்கள், இலை அமைப்புகள் முதலியன கண்கவர் வேலைப்பாடு கொண்டவை. விட்டலசுவாமி கோவில் உபானம் பார்த்து மகிழத்தக்கது. உபானத்தின்மீது இதழ் விரிந்த தாமரை மலர்கள் செதுக்கப் பட்டிருக்கின்றன. இதழ்கள் நெருக்கமாகவுள்ளன; சிறிது தடித்தும் உயர்த்தியும் காட்டப்பட்டிருக்கின்றன. இவ்வேலைப்பாடு மிக்க அழகுடையது. பதுமத்துக்கு மேலாகக் குமுதம் காணப் படுகிறது. அதனைச் சுற்றிலும் எல்லை கோலப்பட்டுள்ளது. எல்லைக்குள் பலவகைக் கட்டடங்கள் அழகுடன் அமைந்துள்ளன.