பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் 5

222

கூரை

இச்சதுரத் தூண்களுக்கு மேல் உள்ள கூரை மிக்க வேலைப்பாடு கொண்டது. அது நீளமானது; அழகிய பல வேலைப்பாடுகளைக் கொண்டது; கூரைக்கு மேல் சில அறைகள் உண்டு. அவற்றில் பலவகைத் தேவர் சிலைகள் வைக்கப் பட்டிருக்கும். இந்தக் காட்சியை விட்டலசுவாமி கோவிலிற் காணலாம். கூரையின் நான்கு முனைகளிலும் விளக்கு வைக்கத் தக்க அமைப்புக் காணப்படுகிறது.

நுழைவின் இரு புறங்களிலும் கதாயுதத்தைப் பிடித்துள்ள வாயிற் காவலர் உருவச்சிலைகள் அல்லது மிக்க திறமை வாய்ந்த வேலைப்பாடு கொண்ட யானைகளின் உருவச் சிலைகள் காணப்படும்.

விமானம்

இவை அனைத்திற்கும் மேலாகக் காண்பது விமானம். இது சில கோவில்களில் நடுமண்டபத்தின்மீது கட்டப்படும். கோபுரங்கள் காணத்தக்க கவின்பெறு வேலைப்பாடு கொண்டவை. விமானம், கோபுரம் என்பன செங்கல்,சுண்ணாம்பு, மரம் இவற்றால் ஆகியவை.அவை முழுவதும் கனமுள்ள பாறைக் கற்களால் கட்டப்படல் ஆபத்தானதன்றோ? ஆதலின் அவை ஒரு பலமுள்ள பாளையின்மீது உயர்த்திக் கட்டப்பட்டன. அவை, அந்தோ! அழிந்து கிடப்பதனால் அவற்றைப் பற்றிய முழு விவரங்களையும் உள்ளவாறு உணரக் கூடவில்லை.

சிற்பம்

அவை

விஜயநகரச் சிற்பங்கள் இணையற்றவை. கோவில்களிலும் கட்டடங்களிலும் காணப்படுகின்றன. அக்காலச் சிற்பங்களை விஜயநகரம், வேலூர், முதுபித்ரி, பட்கல் முதலிய இடங்களிற் காணலாம். விஜய நகரத்தில் உள்ள 'வெற்றி இல்லம்' சிற்பங்கட்குப் பெயர் பெற்றது. பெரியவும் சிறியவுமான குரங்குகள், அரசர் அயல் நாட்டுத் தூதரை வரவேற்று அளவளாவுதல், அரசரும் அரசமா தேவியரும் நடன நிகழ்ச்சியைக் காணுதல், காட்டில் மான், பன்றி முதலியவற்றைப் பெருமக்கள் வேட்டையாடுதல், அவர்களுடன் அவர் தம்