பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருட்டிண தேவராயர்

(223

பெண்டிரும் வில்லும் அம்பும் ஏந்தி வேட்டையாடுதல், பெண்கள் கண்ணாடியில் தங்களைப் பார்த்து ஒப்பனை செய்து கொள்ளுதல், பெண்கள் நடனமாடுதல், சிறைப் பட்டோரை அரசர்முன் சிற்பங்களை வெற்றி இல்லத்திற் காணலாம். அக்காட்சிகள் கண்ணையும் கருத்தையும் கவரத்தக்கவை; கற்பனைத் திறமும் கவிமதவன்மையும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பேரழகும் வாய்ந்தவை. மான்கள், நாய்கள், பாய்ந்து செல்லும் குதிரைகள், போர் வீரர் அணிவகுப்பு முதலியவற்றை உணர்த்தும் சிற்பங்கள் உயிருள்ளனபோலக் காட்சி அளிக்கின்றன. அவை, தம்மை ஒரு முறை கண்டவர் கண்களை விட்டு அகலாதவை.

இசை

கிருஷ்ணதேவராயர் இசையில் ஈடுபாடு உடையவர்; நல்ல சைப் பயிற்சி உடையவர்; பல்வகைப் பண்களைக் கேட்டு அநுபவிக்கும் ஆற்றல் உடையவர். மேனாட்டு அரசர் ஒருவர் தமக்கு அனுப்பிய இசைக் கருவிகளை இராயர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார் என்று மேனாட்டு யாத்திரிகர் குறித்துள்ளார். இராயர்தம் அரண்மனையைச் சேர்ந்த இசைமாதர் பாடுவதைக் கேட்டு மகிழ்வது வழக்கமாம். நல்ல காரியங்கள் நடைபெறும் பொழுதும் பெருமக்கள் அரசரைப் பார்க்கச் செல்லும் பொழுதும் அரண்மனையில் இன்னிசை முழங்குதல் வழக்கம். பலவகை இசைக் கருவிகள் அக்காலத்தில் இருந்தன.

நாடகம்

கு

பண்டைக்காலத்தில் இருவகை நாடகங்கள் நடிக்கப் பட்டன. அவை அரசர்க்கென்று நடிக்கப்பட்டவை. பொது மக்கட்கு என்று நடிக்கப்பட்டவை என்பன. அவை முறையே 'வேத்தியல், பொதுவியல்' எனப்பட்டன. இவ்விருவகை நாடகங்களும் இராயர் காலத்தில் வழங்கியிருந்தன. இராயரே பெரும்புலவர் அல்லவா? அவர் செய்த ‘ஜாம்பவதி கல்யாணம்’ என்ற நாடகம் வசந்த விழாக்காலத்தில் நடிக்கப்பட்டது. அத்துடன் ‘தாயிகுந்து நாடகம்' என்பது ஒன்றும் நடிக்கப்பட்டது.