பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

அப்பாத்துரையம் – 5

மனமகிழ்வுற்று ஊக்கமாகப் பயிரிட்டு நிலவரியைச் செலுத்தினர்; நிலங்களை நல்ல விளைச்சலுக்குரிய முதல்தர நிலங்களாக மாற்றினர். இராயர் கொர்கொல் என்னும் இடத்தில் அணைக் கட்டும் கால்வாயும் அமைத்தார். அக்கால்வாய் இன்றும் நாட்டு மக்கட்குப் பயன்பட்டு வருகின்றது. இராயருடைய மாகாண தலைவரான கொண்டமரசய்யன் என்பவர் உதயகிரி இராச்சியத்தில் ‘அனந்தசாகரம்’, ‘காலுவாயி’ என்ற பெயர் கொண்ட பெரிய குளங்களை அமைத்தார். இவ்வாறே மாகாணத் தலைவர் பலர் தத்தம் மாகாணங்களிற் செய்த நீர்ப்பாசன வசதிகள் பலவாகும்.

கைத்தொழில் வளர்ச்சி

நூற்றாண்டில்

கைத்தொழில்

கி.பி. பதினாறாம் வளர்ச்சியில் ஐரோப்பிய நாடுகளைவிட இந்தியா மிக்க வளர்ச்சி பெற்றிருந்தது. இந்தியா அக்காலத்தில் அயல்நாடுகளை உணவுக்கோ - உடைக்கோ-பிற பொருள்களுக்கோ எதிர்பார்க்க வில்லை. இந்திய மக்கட்கு வேண்டியன அனைத்தும் இந்தியாவிலேயே கிடைத்தன. அக்கால அயல்நாட்டுப் பொருள் குதிரைகளும் அரசர்க்குத் தேவையான ஆடம்பரப் பொருள்களுமேயாகும். ஆதலின் பொது மக்கள் அயல்நாட்டு இறக்குமதிப் பொருள்களை எதிர்பாராது வாழ்ந்துவந்தனர்.

நெசவுத் தொழில்

கிருஷ்ணதேவராயர் காலத்தில் கோவன்புத்தூர், மதுரை, புலிகட் முதலிய இடங்களில் அழகிய மெல்லிய கண் கவரத்தக்க விலை உயர்ந்த பருத்தி ஆடைகளும், பட்டாடைக நெய்யப்பட்டன. அவை மலாக்கா, பெரு, சுமத்ரா, கூர்ஜரம், மலையாளம் முதலிய அயல்நாடுகட்கு அனுப்பப் பட்டன.

வைரம்-பொன்-வெள்ளிப் பொருள்கள்

குத்திக்குத் தென்மேற்கே இருபது கல் தொலைவில் உள்ள வச்சிரக்குரூர் என்னும் இடம் அக்காலத்தில் வைரத்திற்குப் பெயர் பெற்றதாக இருந்தது. அங்கு இருந்த அரசாங்க அதிகாரி அங்குக் கிடைத்த உயர்தர வைரக் கற்களை எல்லாம் இராயருக்கு அனுப்பிவந்தான். விஜய நகரத்திலேயே மலைப் பாறைகளிடம்