8
பாண்டிய மன்னர்
அப்பாத்துரையம் - 5
பாண்டிய நாட்டைப் பண்டு தொட்டே அரசாண்டு வந்தவர் பாண்டியர் எனப்பட்டனர். அவர் செந்தமிழில் ஈடும் எடுப்பும் இல்லாத பற்றுடையவராக இருந்தனர்; பெரும் புலவராகவும் விளங்கினர். பாண்டி மாதேவியர் சிலரு ம் கவிபாடும் ஆற்றல் பெற்று வாழ்ந்தனர். பாண்டியர் தங்கள் கோநகரத்தில் தமிழ்ச்சங்கம் ஒன்றை வைத்து ஆதரித்து வந்தனர்; நாட்டில் இருந்த புலவர்கள் செய்த பாக்களையும் நூல்களையும் பாராட்டிப் பரிசில் ஈந்து களித்தனர். பாண்டியருள் மிகச் சிறந்தார் இருவர். ஒருவன் இளைஞனாக இருந்தபொழுதே தன்னை எதிர்த்த சோழனையும் சேரரையும் சிற்றரசர் ஐவரையும் 'தலையாலங்கானம்' என்ற இடத்தில் வென்று, ‘தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்' என்று பெயர் பெற்றவன்; கவிபாடும் ஆற்றல் பெற்றவன். மற்றவன் ஆரியப் படையை வென்று, ‘ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' எனப்பட்டவன். இவனும் கவிபாடுதலில் வல்லவன். கோவலனைக் கொல்வித்தவன் இவனே ஆவான்.
சங்க காலம்
பாண்டிய மன்னரால் பாதுகாத்து வளர்க்கப்பெற்ற தமிழ்ச் சங்கத்தின் இறுதிக் காலம் ஏறத்தாழக் கி.பி. 400 என்னலாம் என்பது ஆராய்ச்சியாளர் கொள்கை.இதுவே சங்கத்தின் இறுதிக் காலமாகும். அதன் தோற்றம் நாம் கூறக்கூடும் நிலையில் இல்லை. அச்சங்கத்தில் செய்யப்பட்ட நூல்கள் ‘சங்க நூல்கள்' எனப் பெயர் பெறும்.
சங்க நூல்கள்
வை
-
தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் முதலியன. இவற்றுள் தொல்காப்பியம் சிறந்த பண்டைய இலக்கண நூல்ஏனைய ஒன்பதும் புலவர் பலர் -பல்வேறு காலங்களில் பல்வேறு அரசரையும் சிற்றரசரையும் வள்ளல்களையும் பற்றிப் பாடிய பாக்களின் தொகுதிகளாகும்.