கிருட்டிண தேவராயர்
(233
செல்லப்பட்டது. போர்ச்சுகீசியரும் பெரு நாட்டு வணிகரிடம் இரும்பை வாங்கினர்.பத்கல்லிலிருந்து சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது. அராபியக் கப்பல்கள் பத்கல்லிலிருந்து வாசனைப் பொருள்களை ஏற்றிச் சென்றன.'
விஜயநகரப் பேரரசு மேற்கே போர்ச்சுகல் முதல் கிழக்கே சீன நாடுவரை அயல்நாட்டு வாணிகம் செய்துவந்தது. இவ்வளவு பரந்த நிலையில் வேறு எந்தத் தென் இந்திய அரசும் கடல்வாணிகம் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜயநகரப் பெருநாட்டில் அப்தூர் ரஸாக் என்ற யாத்திரிகர் பிரயாணம் செய்தவர். அவர் அப்பெருநாட்டில் முந்நூறு துறைமுகங்கள் இருந்தன என்று குறித்துள்ளார். மேற்குக்கரையில் மிகச் சிறந்த துறைமுகம் கள்ளிக்கோட்டை என்பது.
66
கிருஷ்ணதேவராயர் கடல்வாணிகத்தில் மிக்க அக்கறை கொண்டவர். அவர் தாம் இயற்றிய ஆமுக்தமால்யதாவில், 'அரசன் தன் நாட்டுத் துறைமுகங்களை நன்னிலையில் வைத்திருத்தல் வேண்டும். பரிகள், கரிகள், நவமணிகள், சந்தன மரங்கள், முத்துக்கள் முதலியன பெரிய அளவில் இறக்குமதியாகத் தக்க வசதி செய்துதருதல் வேண்டும். புயற்காற்றினாலோ - உடல் நலிவாலோ - கப்பல் கவிழ்வதாலோ தன் நாட்டுக் கரையை அடையும் கப்பல் வாணிகரையும் மாலுமிகளையும் அரசன் அக்கரையோடு கவனித்து வேண்டும் உதவிகளைச் செய்ய வேண்டும்; பெருநாட்டில் உள்ள தோட்டங்கள், பண்ணைகள், கரங்கங்கள் முதலியவற்றைத் தன் நம்பிக்கைக்கு
1
உரிய
அதிகாரிகளிடமே ஒப்புவித்தல் வேண்டும்; கரிகளையும் பரிகளையும் கொணர்ந்து விற்கும் அயல்நாட்டு வணிகர்க்கு வேண்டும் மாளிகை அளித்து, அவர்கட்கு உணவு-உடைகளை வழங்கி, அவர்களை நாடோறும் கண்டு அளவளாவி, மிக்க இலாபத்தை அளித்துப் பலவகைப் பரிசுகளையும் கொடுப்பின், கரிகளும் பரிகளும் பகை அரசர்க்கு விற்கப்படா," என்று குறித்துள்ளார். இதுவே இராயர் கையாண்ட முறை. அறிவும் அன்பும் மிக்க இந்த முறையினால் அவர், அராபிய வணிகரையும் போர்ச்சுசீசிய வணிகரையும் தம்பால் இழுத்துக் கொண்டார். அதனால் அயல்நாட்டு வாணிகம் மிக்க உயரிய அளவில் செம்மையாக நடைபெற்று வந்தது.