236
அப்பாத்துரையம் - 5
நகரத்திலிருந்து பல பாதைகள் பெருநாடு முழுவதும் சென்றன; ஒரு பாதை பங்காபூர் வழியாகக் கோவாவிற்குச் சென்றது; மற்றொன்று பங்காபூரிலிருந்து ஹொனாவர் வழியாகப் பத்கல் துறைமுக நகரத்திற்குச் சென்றது; தலைநகரிலிருந்து பெனு கொண்டா, சந்திரகிரி, திருப்பதி, புலிக்கட் இவற்றின் வழியாக மயிலாப்பூரை அடையப் பெரும்பாதை ஒன்று இருந்தது; மற்றொரு பாதை சிவசமுத்திரத்திற்கும் ஸ்ரீரங்கப் பட்டணத்திற்கும் சென்றது; ஒன்று ஆதவாணி, இராயச்சூர் என்னும் நகரங்கட்குச் சென்றது; பிறிதொன்று உதயகிரி, கொண்டவீடு, கொண்டபல்லி-பிறகு லோரமாகச்
சிம்மாசலம், ஸ்ரீகூர்மம் முதலிய இடங்கட்குச் சென்றது; மற்றொரு பாதை விஜய நகரத்திலிருந்து புறப்பட்டுத் திருப்பதி, காளத்தி, காஞ்சி, சிதம்பரம், மதுரை, இராமேசுவரம், தனுஷ்கோடி முடியச் சென்றது.
நாணய மாற்று
வி ஜயநகர ஆட்சியில் பொன் நாணயங்களே மிகுதி. அரசாங்க முத்திரையிடப்பட்ட நாணயம் வராஹம் என்பது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் கீழ்வரும் நாணயங்கள் வழக்கில்
இருந்தன.
1. தங்க நாணயம்
2. தங்க நாணயம்
3. தங்க நாணயம்
4. தங்க நாணயம்
வராஹன்
அரை வராஹன் கால் வராஹன்
பணம் (1/20 வராஹன்)
5. வெள்ளி நாணயம் தர் (1/60 வராஹன்)
6. செம்பு நாணயம் ஜிதல் (1/90 வராஹன்)
பொருள் விலை
ஒவ்வொரு பொருளின் விலை மதிப்பு மிகக் குறைவானது. விஜய நகரத்தில் அரிசி, கோதுமை, சோளம் கேழ்வரகு, கொள்ளு முதலிய தானிய வகைகளும் கொட்டை வகைகளும் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் மிக்க மலிவான விலைக்கே கிடைத்தன. ஒரு கோழியின் மிதிப்பு அரையணா; ஆறு அல்லது எட்டுக் கௌதாரிகளின் விலை ஒன்றரை அணா; ஒரு பணம் (எட்டணா மதிப்பு) கொடுத்து மூன்று திராக்ஷைக்