சங்க காலப் புலவர்கள்
9
சிலப்பதிகாரம் என்பது கோவலன் வரலாறு கூறும் காவியம். அதனைச் செய்தவர் சேர இளவரசரான இளங்கோவடிகள் என்பவர். மணிமேகலை என்பது கோவலன் மகளான மணிமேகலையைப் பற்றிய காவியம். அதனைப் பாடியவர் சீத்தலைச் சாத்தனார். திருக்குறள் ஒப்புயர்வற்ற நீதிநூல். அதனைச் செய்த பெரும்புலவர் திருவள்ளுவர் என்பவர்.
சேர நாடு
இன்றைய திருவாங்கூர்' கொச்சி நாடுகளும் மலையாளம் ஜில்லாவும் சேர்ந்த நிலப்பகுதியே பழைய சேர நாடு என்பது. இது முழுவதும் மலைநாடு; அதனால் ‘மலையாளம்' எனப் பெயர் பெறும். இங்கு வானளாவிய மலைகளும் அம்மலைகளில் உள்ள பெருங்காடுகளும் காணத்தக்க காட்சிப் பொருள்கள் ஆகும். இங்குச் சந்தனம், அகில்,தேக்கு முதலிய உயரிய மரவகைகள் ஏராளமாகப் பயிராகின்றன. இவையும் யானைத் தந்தம், மிளகு முதலியனவும் மிகுதியாக அயல்நாடுகட்கு ஏற்றுமதியாயின.
நகரங்கள்
சேரநாட்டுத் தலைநகரம் வஞ்சி மாநகரம் என்பது. அஃது இப்பொழுது கொச்சிக்கு வடக்கே எட்டுக்கல் தொலைவில் பாழ்பட்ட சிற்றூராகக் காண்கிறது. அது சங்க காலத்தில் பெருஞ் சிறப்புற்ற நகரமாக விளங்கியது. முசிறி, தொண்டி என்பன சேரநாட்டுத்துறைமுக நகரங்கள் ஆகும். சேரநாடு கி.மு. 1000 முதலே கடல் வாணிகத்திற் சிறந்திருந்தது.
சேர வேந்தர்
மலைநாட்டைப் பன்னெடுங் காலமாக ஆண்டு வந்தவர் சேரர் எனப்பட்டனர். அவர் உயர்ந்த வானளாவிய மலைகளைப் பெற்றிருந்த காரணத்தால் 'வானவர்' எனப் பெயர் பெற்றனர். அவருள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், செங்குட்டுவன் என்போர் புகழ்மிக்க பேரரசர் ஆவர். செங்குட்டுவன் தம்பியாரே, சிலப்பதிகாரம் செய்த இளங்கோவடிகள் என்பவர்.செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலைநாட்டுக் கோவில் எடுக்க வடநாடு சென்ற மயமலையிலிருந்து கல் கொணர்ந்தவன்; கோசல நாட்டில்