ஓவியக் கலைஞன் இரவிவர்மா
(247
தற்புனைவும் அணியழகும் நிறைந்ததாயினும், இயற்கை வாய்மை கடவாதது. பொருந்தாக் கற்பனைக்கு அதில் இடமில்லை. கலைத்துறையிலும் வடநாட்டுக் கலை, தென்னாட்டுக் கலை, ஆகியவற்றின் வேறுபாடு இத்தகையதேயாகும். தென்னாட்டுக் கலை வாழ்க்கையையும், இயற்கை வாய்மையையும் பேணுவது; அது மாயக் கற்பனைகளில் உலவுவதன்று.
இரவிவர்மா தென்னாட்டில் மட்டுமன்றி, வடநாட்டிலும் கலையியக்கம் தூண்டியவர். ஆனால், தென்னாடு அவர் முறையை நேரடியாகக் கைக்கொண்டு வளர்க்க முடிந்தது. வடநாட்டில் அவரது ஆய்வியல் முறை (Realism) வளம்பெறவில்லை. கட்டற்ற புனைவியல் முறையே (Idealism) வளர்ந்தது. இரவிவர்மாவுக்கு
வ்வாய்வியல் முறையில் மேனாட்டுக் கலைமரபு தூண்டுதல் தந்தது என்பது உண்மையே. ஆனால், அது அயல்நாட்டு முறையாக மட்டுமிருந்தால், அதில் அவர் இவ்வளவு எளிதாகத் தென்னாட்டுக் கலையையும், கீழ்நாட்டுப் பண்பையும் வளர்த்திருக்க முடியாது. உண்மை யாதெனில், மேனாட்டு முறை அவருக்கு முழுவதும் மேனாட்டு முறையாயமையவில்லை. அது அவர் தாயக மரபாகவே, தாயகமரபாகிய தென்னாட்டு மரபுக்கு ஒரு தூண்டுதலாகவே இருந்தது. அவர் குடும்பத்தில் அவருக்கு முன்னும் பின்னும் அவரைப்போலவே மேனாட்டு மரபைப் பின்பற்றி வெற்றி கண்டவர் உண்டு என்பது இவ் வுண்மையை வலியுறுத்துவது ஆகும்.
மேனாட்டுக் கலைவரலாற்றைப்போலவோ, அல்லது வடநாட்டுக் கலைவரலாற்றைப்போலவோ கூட, இன்னும் தென்னாட்டுக் கலை வரலாறு விளக்கமாக எழுதப் பெறவில்லை. ஆனால், கட்டடக்கலை, இசை, இலக்கியம்,வான நூல், மருத்துவம் ஆகிய எல்லாத் துறைகளையும் போலவே, இத்துறையிலும் தென்னாட்டுக்கென்று ஒரு தனி மரபு உண்டு என்று காண்பது அரிதன்று. மொகஞ்சதரோவிலும், ஹரப்பாவிலும் மற்றும் இவைபோலவே இந்தியா முழுவதிலும் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள், காசுகள், மட்பாண்ட ஓவியங்கள் ஆகியவை இந்தியாவின் மூலக்கலைப் பண்புகளான தென்னாட்டின் மூலத் தனிப்பண்புகளுக்குச் சான்றுகள் ஆகும். சங்க இலக்கியங்களில் முல்லைப்பாட்டிலும் பிற இடங்களிலும் ஓவியக் கலை பற்றியும்,