பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

அப்பாத்துரையம் - 5

பிற கலைப்பொருள்கள் பற்றியும் விரிவான விளக்கங்கள் காண்கிறோம். புத்த சமண காலக்கலை காலக்கலை இந்தியாவுக்குப் பொதுவாயினும், தென்னாட்டுக்கே அது சிறப்பென்பதும், தெற்கு நோக்கி வருந்தொறும் அது தனிப் பண்பு மிக்கதாகிற தென்பதும் உற்றுநோக்கத் தக்கன. தென்னாட்டுக் கட்டடக் கலையில் இத்தனிப்பண்பு இன்னும் முனைப்பாகத் தெரிகின்றது. ஆயினும் சித்தன்ன வாசல் ஓவியங்களில் மட்டுமாவது, இதே அளவு தனிப்பண்பை ஓவியக்கலையிலும் காணாதிருக்க முடியாது.

வடநாட்டுப் புத்த சமண ஓவியங்களைப்போல் சித்தன்ன வாசல் ஓவியம் முற்றிலும் சமயச் சார்பாயில்லை. வடிவமைதியில் அது வடநாட்டுப் புத்த சமண மரபையோ, இன்றைய வடநாட்டு மரபையோ நினைவூட்ட வில்லை. மேனாட்டு மரபையும், இரவிவர்மாவின் மரபையும்போலவே அது வடிவமைதியுடைய தாய் அமைகின்றது. வடநாட்டிலும் இரஜபுத்திரர் கலை மரபும் முகலாயர் கலை மரபும் முன் மரபுகளைவிட இதே பண்புகளை ஓரளவு வற்புறுத்திக் காட்டுகின்றன. இவற்றை அயல்நாட்டுப் பண்புகள் என வடநாட்டு ஆராய்ச்சியாளர் ஒதுக்குகின்றனர். உண்மையில் இவை வடநாட்டிலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் கீழ்நாட்டின் மூலப் பண்பாயிருந்த தென்னாட்டுப் பண்பின் தாக்குதல் விளைவே எனக் காள்வது

பொருத்தமற்றதன்று.

இரவிவர்மாவின் வாய்வியல் பண்பைத் தென்னாட்டுப் பண்பு என்று கண்டால், அது கலை வரலாற்றுக்கே பெருவிளக்கம் தருவது ஆகும். இத் தென்னாட்டுப் பண்பு மேனாட்டுப் பண்பின் விளைவுமல்ல- பிற்காலப் பண்புமல்ல. அது உண்மையில் மேனாட்டுப் பண்புகளுக்கும், வடநாட்டுப் பண்புகளுக்கும் முற்பட்ட இந்தியாவின் மூலமுதற் பண்பேயாகும். இலக்கியத்தில் சங்க இலக்கியத்தின் வாய்மைத் திறனும் கலைச்செப்பமும் குன்றிய காலத்தில், கருத்தற்ற கற்பனை புகுந்தது போலவும்; வடமொழியில் காளிதாசனின் செவ்விய இயற்கை நடையும், இயற்கையணியும் குன்றிய காலத்தில், பிற்காலச் செயற்கைக் கடுநடையும், செயற்கையணிகளும் மலிந்தது போலவும்; கலைத்துறையில் வடிவமைதித் திறமும் வாய்மைத்