10
அப்பாத்துரையம் – 5
தன்னை எதிர்த்தாரை வென்று மீண்ட வீரன். இவன் வரலாற்றைச் சிலப்பதிகாரத்திற் காணலாம். சேர மன்னர் புலவர் பலரைப் போற்றி ஆதரித்து வந்தனர். 'பதிற்றுப்பத்து' என்பது சேர அரசர் பதின்மரைப் பற்றிப் புலவர் பதின்மரால் பாடப்பட்டதாகும். அந்நூலிலிருந்து அவர்தம் தமிழ்ப் பற்று, வீரம், கொடைத்திறம், அரசியல் நேர்மை முதலியவற்றை நன்கறியலாம்.
கொங்கு நாடு
இது சேலம், கோயமுத்தூர், நீலகிரி ஜில்லாக்களைக் கொண்ட பகுதியாகும். இது பெரும்பாலும் மலை நாடாகும். "இந்நாட்டின் மலைகளில் கொங்கு (தேன்) அடைகள் மிக்கிருந்தது பற்றி இந்நாடு 'கொங்குநாடு' (தேன் நாடு) எனப் பெயர் பெற்றது” என்று அறிஞர் கூறுவர். சங்க நூல்களில் புகழ்ந்து பாராட்டப்பெற்ற தகடூர் நாடு, கொல்லிமலை நாடு முதலியன இந்நாட்டிற்றான் இருக்கின்றன. பழைய ‘தகடூர்’ என்பது இக்காலத்தில் ‘தர்மபுரி' எனப்படுகிறது. அதற்கு ஏறத்தாழ ஐந்து கல் தொலைவில் அதியமான் கோட்டை இருந்து அழிந்தமைக்கு உரிய அடையாளங்கள் இன்றும் காணலாம். வல்வில் ஒரி கொல்லிமலைப் பகுதியை ஆண்டு வந்தவன். அவனது உருவச்சிலை கால்லிமலைக் கு எட்டுக்கல் தொலைவில் உள்ள இராசிபுரம் விஸ்வநாதர் கோவிலில் காணலாம். கொங்கு நாடு சேர, சோழ, பாண்டிய, தொண்டை நாடுகட்கு அண்மையில் இருப்பதால், இதனைக் கைப்பற்ற ஒவ்வொருவரும் முனைந்து வந்தனர்.இந்த முனைப்பினால் அதியமானுக்கும் அயல்நாட்டு வேந்தர்க்கும் ஓயாத போர்கள் நடந்த வண்ணம் இருந்தன. இப்போராட்டம் சங்க கால முதல் இராஜராஜ சோழன் போன்ற பிற்காலச் சோழர் - பாண்டியர் காலம்வரை நடைபெற்று வந்தது.
குறுநில மன்னர்
ல
இங்குக் கூறப்பெற்ற சேர, சோழ, பாண்டியர் என்பவர் முடியுடை மூவேந்தர் என்றும், 'நெடுநில மன்னர்' என்றும் கூறப் பெறுவர். மற்றையோர், 'குறுநில மன்னர்' (சிற்றரசர்)
ல்