(256) ||
அப்பாத்துரையம் - 5
காடுகளில் மானும், மிளாவும், முயலும் திரிந்தன. இங்ஙனம் நாட்டுவளமும் காட்டுவளமும் ஒருங்கே உடைய உடைய இப்பண்ணை கிளிமானூர் மரபினருக்குத் திருவாங்கூர் அரசியலாரால் 1729-ல் அளிக்கப்பட்டது. அது திருவனந்தபுரத்திலிருந்து 27 கல் தொலை வடக்காகவும், ஆற்றங் கலிலிருந்து 7 கல் தொலை வடகிழக்காகவும் இருக்கிறது. அது 17 சதுரக்கல் பரப்பும் 8,000 குடிமக்கள் தொகையும் உடையது. அக்காலத்தில் கிளிமானூர்க் குடியில் கேரளவர்மா என்ற ஒரு வீரச் சான்றோர் இருந்தார். பட்டத்தரசி அவர் வாழ்க்கைத் துணைவியாகவும், வயது வராத மன்னர் அவர் குழந்தையாகவும் இருந்தனர். மன்னர் சிறுவரா யிருக்குமிடங்களில் உள்நாட்டுக் கட்சிகளும், கலவரங்களும், போர்களும் நாட்டை நலிவிப்பது இயல்பு. இத்தகைய சூழலில் மன்னரின் நண்பர் அரச குடும்பத்தைக் கண்ணிமைபோல் காத்தனர். ஆனால், அப்படியும் மன்னர் பாதுகாப்புப் பற்றி அவர்கள் கவலையும் அச்சமுங் கொண்டனர். எனவே, அவர்கள் மன்னர் குடும்பத்தைத் தற்காலிகமாக மறைத்து ஆற்றங்கலுக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுடன் சென்ற வீரநாயர்களின் காவற்படைக்குக் கேரளவர்மாவே தலைவராயிருந்தார்.
வழியில் கழைக்கூட்டம் என்ற இடத்தினருகில் அரசர் குடியினர் வந்தபோது, புதர்க்காட்டிலிருந்து திடுமெனக் கலகக்கார எதிரிகள் அவர்கள்மீது பாய்ந்தனர். குழந்தையா யிருந்த மன்னரும் அவர் அன்னையராகிய அரசியும் அஞ்சி நடுநடுங்கினர். கேரளவர்மா தம் படையுடன் எதிரிகளைத் தாக்கினார். படை சிறு படையானதால் விரைவில் எதிரிகளின் கைப்பட்டு அழியத் தொடங்கிற்று. அப்பொழுதும் வீரரான கேரளவர்மா ஒரு சிலருடன் உயிர்வெறுத்து நின்று மும்முரமாகப் போராடினார். இப் போராட்டத்தினால் கிடைத்த ஓய்வை மற்ற நண்பர்கள் பயன்படுத்தி, அரசியையும் மன்னரையும் அப்பால் கொண்டு சென்றுவிட்டனர். ஆனால், கேரளவர்மா இறுதி மூச்சுவரைச் சமர்செய்து வீரத்துறக்க மடைந்தார்.அவர் வீரச்செயலை மெச்சி அரசியலார் அவர் மரபுக்கு அளித்த மானியமே கிளிமானூர்ப் பெரு நிலப்பண்ணை.
தென்னாட்டுக் கலைக்கும் மலையாள இலக்கியத்துக்கும் கிளி மானூர்மரபு தந்த ஆக்கம் பெரிது. அம்மரபில் எத்தனையோ