பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓவியக் கலைஞன் இரவிவர்மா

261

முடிவதில்லை. செல்வரும் ஆதிக்க வகுப்பினரும் பிறமொழி, பிறபண்பு பேணுவதிலன்றித் தாயகப் பண்பில் நாட்டங்கொள்ள முடிவதில்லை. இவற்றின் பயனாகச் சீர்கெட்டு நலிந்து வரும் கலைகள் பல. மேனாட்டு மருத்துவ முறைகளை எதிர்த்து ஓரளவு ஆயுர்வேதம், யூனானி முதலிய கீழ்நாட்டு முறைகள் இன்று தலையெடுக்க முடிகிறது. ஆனால், தென்னாட்டுச் சித்த மருத்துவம் அவற்றுடன் சரி ஒப்பான இடம்பெற முடியவில்லை. தென்னாட்டு வானநூல்முறை வடவர் வடவர் முறைகளையும் மேனாட்டு முறைகளையும்விடத் தற்கால அறிவுநூல் முறைக்கு ஒத்ததென யாவரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆயினும் அது தமிழக எல்லைக்கு அப்பால் வழக்கிலில்லை. தமிழகத்திலும் உயர்குடி மக்கள் எனப்படுவோரின் அறியாமையாலும், புறக்கணிப்பாலும் அது சிதைவுற்று வருகிறது.

டி

இலக்கியத்துறையில் தென்னாட்டின் தலைசிறந்த பண்டைத் தமிழ், கன்னட இலக்கியங்கள் இருக்கவேண்டும் இடத்தில், வடமொழி இலக்கியம் இடம் பெற்றுள்ளது. மேனாட்டவர் கண்கள்கூட கண்கள்கூட மிகுதியாகத் தென்னாட்டி லக்கியத்தின்மீது படுவதில்லை. வடநாட்டுத் தாய்மொழி இலக்கியங்களைப் போல, அவையும் வடமொழி இலக்கியத்தின் நிழல்கள் என்றோ; அல்லது வடமொழி இலக்கியம்போல அவை புராணங்களின் மறுபதிப்புக்கள் என்றோ தவறாகக் கருதப்படுவதே இதற்குக் காரணம்.

கலைத்துறையில் தென்னாட்டின் பல மரபுகள் மலையாள நாட்டில் மன்னராலும் மக்களாலும் இன்றுவரை பேணப்படினும், தென்னாட்டவரும், பிறநாட்டவரும் அவற்றைத் தென்னாட்டுக் கலைகள் என்று காணாமல், மலையாள நாட்டுக்கு மட்டுமே உரிய கலைகள் என்று ஒதுக்கிவிடுகின்றனர். இரவிவர்மாவின் கலைமரபும் இத்தகையதே. அவர் கலை அவர் காலத் திற்குள்ளேயே வடநாட்டிலும் மேனாட்டிலும் பரந்தாலும், வடநாட்டி லெழுந்த புதிய வங்கக் கலைமலர்ச்சி இயக்கம் அதை இருட்டடிப்புச் செய்து வருகிறது.

திருவாங்கூரிலுள்ள ஆசிரியர் கே.பி. பத்மநாபன் தம்பி அவர்கள் இரவிவர்மா பற்றிய வடநாட்டினர் புறக்கணிப்புப் பற்றிக் கூறுவதாவது:- "ஐரோப்பியக்கலை அறிஞர்கள்கூட