(266)
அப்பாத்துரையம் - 5
கூத்து ஆகிய பண்டை நாடகக் கலைத்துறைகளில் இன்றும் வழங்குகின்றன. தூரிகைகள் இதுபோலவே நார்கள், மயிர்த்துய்கள், தென்னைமட்டைக் குச்சுகள் ஆகியவற்றால் செய்யப்பட்டிருந்தன. கலைச்சிறுவன் இரவிவர்மா படிப்படியாக இத்தகைய சரக்குகளைக் கையாளப் பழகினார். தாய்மாமன் இராஜராஜ வர்மா அவர் கலையார்வத்தைப் பேணிவளர்த்து, அத்துறையில் அவருடைய முதலாசிரியராய் விளங்கினார். வளரும் பிள்ளையைக் கண்டு மகிழும் தாயைப்போல, அவர் கலை வளர்ச்சி கண்டு இராஜராஜ வர்மா மகிழ்வுற்றார்.
மொழிப் பயிற்சியைவிட்டு இரவிவர்மாவின் மனம் வண்ணக் கலையிலேயே சென்றாலும், அவர் வடமொழிப் பயிற்சி முற்றிலும் வீண் போகவில்லை. அது அவர் கலைத்துறையில் யாரும் எதிர்பாராத புதுப்பயனை அளித்தது. காளிதாசனின் சகுந்தலையும் பவபூதியின் மாலதியும் பாணபட்டனின் காதம்பரியும் கவிதையுருவில் அவர் காது வழி சென்று, கலையுருவில் அவர் உள்ளத்தில் கிளர்ந்து, கலைச் சித்திரங்களாக மாற்றமுற்று வளர்ந்தன. வால்மீகியின் இராமாயணமும், வியாசரின் பாரதமும் அவர் மலையாள உள்ளத்தில் தோய்ந்து, எழுத்தச்சனின் பக்தி வெள்ளத்திலும் கண்ணஃச்சப் பணிக்கரின் இன்னிசைப் பண்பிலும் மிதந்து, அலை பாய்ந்து, பழமையிற் புது உலகு படைக்கும் கற்பனைத்திறனை அவருக்கு அளித்தன. ஆனால் கவிதை, பக்தி, கதை யாவும் அவர் உள்ளத்தில் குஞ்சன் நம்பியாரின் உலகியல் திறம்வாய்ந்த அகல்திறப் பண்பளாவிக் கைைலயுருவம் பெற்றன. சொற்கள் உருக்களாகவும், பண்புகள் பண்பிகளாகவும் மாறின. உவமைகள் வண்ணங்களாயின. அணிநயங்கள் கைத்திற நுட்பங்களாய்த் தூரிகையை இயக்கும் வடிவழகுக் காட்சிகளாயின. உலகின் மெய்யுருக் காட்சிகளைக் கண்டு தீட்ட விரும்பிய கலைஞன் அகக்கண்முன் இக்காவியங்கள் உலகின் மெய்வண்ணமளாவிய காட்சிகளையும் எழுப்பி வாய்மை வழுவாக் கற்பனைச் செப்பம் வளர்க்கவும் பயன்பட்டன.
ச்சமயம் மலையாள நாட்டின் சிறந்த கலைஞராக இராஜராஜவர்மா கோயில் தம்பிரான் கலைப்புகழ்பெற்று விளங்கினார். அவரிடம் கீழ்த்தரக் கலைஞரிடையே காணப்படும் அழுக்காறு, அவா, வெகுளி ஆகியவை சிறிதும் கிடையாது.