12
அப்பாத்துரையம் - 5
பற்றிய பல பாடல்கள் சங்க நுல்களிற் காணலாம். அவனது சிறந்த நண்பராகவும் அவைப் புலவராகவும் இருந்து அவனை மகிழ்வித்தவர் பரணர் என்னலாம்.ஆய் என்பவன் திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள பொதிகை மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். அவன் மிகச் சிறந்த கொடைவள்ளல். அவனைப் பலபடியாகப் புகழ்ந்து பாடியவர் உறையூர் - ஏணிச்சேரி முடமோசியார் என்பவர். நள்ளி என்பவன் தோட்டிமலை நாட்டை ஆண்ட சிற்றரசன். அந்நாடு பாண்டிய நாட்டை சேர்ந்தது. அவன் தன் பெயர் வெளிப்படுவதை விரும்பாது அறம் செய்யும் உளப் பான்மை உடையவன். அப்பெருமகனைப் பற்றி வன்பரணர் முதலிய புலவர் பலர் பாராட்டிப் பாடியுள்ளனர். குமணன் என்பவன் கோயமுத்தூர் ஜில்லா, உடுமலைப் பேட்டைத் தாலுகாவில் உள்ள ‘முதிரமலை’ நாட்டை ஆண்டு வந்தவன். அவன் தன் கொடைத் தன்மைக்காகத் தம்பியால் வெறுக்கப்பட்டுக் காடு சென்றவன் எனின், அவனது கொடைச் சிறப்பை என்னென்பது!
இங்ஙனம் தன்மை அண்டி 'இல்லை' என்றோர்க்கு 'இல்லை' என்று உரையா இதயம்படைத்த இப்பெரு மக்கள் பலராற்றான் சங்க காலத் தமிழ் செழிப்புற்று வளர்ந்தது. இவர் புலவரது வறுமைப் பிணியைப் போக்கினர், அதனால் செழுமையுற்ற புலவர் செந்தமிழ்ப் பாக்களைப் பாடி இவர்களை மகிழ்வித்தனர். ஆதலால் நமது தாய்மொழி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ச்சிபெற்று வந்தது.
புலவர்கள்
இப்பொழுது கிடைத்துள்ள சங்க நூற்களைக் கொண்டு ஆராயின், சங்ககாலப் புலவர் ஏறத்தாழ நானூற்றுவர் என்னலாம். இப்பெரு மக்கள் பாடிய எல்லாப் பாக்களும் கிடைத்தில. அவை கிடைத்திருப்பின், நமது நாட்டு வரலாறும் தமிழ் மொழியின் மேம்பாடும் மிக நன்றாக உணர வழியுண்டாகி இருக்கும். இப்புலவர் பெருமக்கள் தமிழகம் முழுவதிலும் பரந்துபட்டுள்ள பல ஊர்களைச் சேர்ந்தவர்கள்; பல மரபினர்; பல தொழிலினர்; பல சமயத்தைச் சேர்ந்தவர்; பல்வேறு காலத்தவர். இவருள் பேரரசரைப் பாடினோர் சிலர்; சிற்றரசரைப் பாடினோர் பலர்; ருவகை அரசரையும் பிறரையும் பாடினவர் பலர். இப்புலவருள்