பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓவியக் கலைஞன் இரவிவர்மா

(275

வேறு இரண்டு படங்களை இரவிவர்மா இளவரசருக்குப் பரிசளித்தார். ஐரோப்பியக் கலைமுறைகளில் சிறப்புப் பயிற்சி பெறாமலே அவர் ஐரோப்பியக் கலைஞர் போற்றும் திறம் பெற்றிருந்தது கண்டு இளவரசர் அவரை வியந்து மெச்சினார்.

புராண காவியக் கற்பனை உருவங்களில் இரவிவர்மா பல முதல் முயற்சிகளில் பயின்றுவந்தாலும், சித்திரத்தில் பெருஞ் சிறப்புக்குரிய அவர் முதல் படைப்பு 'கன்னி சகுந்தலையின் காதல் முடங்க'லே. இது 1878-ம் ஆண்டில் வரைந்து முடிக்கப்பட்டது. இதுவும் கலையரங்குகளில் போற்றப்பட்டுச் சென்னை ஆட்சியாளரின் தங்கப்பதக்கம் பெற்றது.

அத்துடன் இப்படமூலமே அவர் அப்போதைய ஆட்சியாளரான பக்கிங்ஹாம்- சந்தாஸ் கோமகன் நன்மதிப்பையும் நேசத்தையும் பெற்று அவருடைய நெருங்கிய நண்பரானார். மேலும் வெள்ளையரான அவர் கண்களைக்கூட, இக் கீழ்நாட்டுப் புராணச் சித்திரம் கவர்ந்ததனால், அவர் அதனை விலை காடுத்துப் பெற்றுத் தம் மனையின் கலை ஒப்பனைப் பொருளாக்கினார்.

புராணப்படத்தின்

கவர்ச்சியால் பெற்ற நேசம் உயிரோவியத் துறையிலும் அவர் புகழை நாட்ட ஓர் ஏதுவாயமைந்தது. பக்கிங்ஹாம் கோமகன் ஏற்கனவே மேனாட்டுக் கலையில் ஆர்வமும் மேனாட்டுக் கலைஞருடன் தொடர்பும் கொண்டிருந்தவர். மேனாட்டு மரபுப்படி அவர் கலைஞர் முன் பலநாள் உட்கார்ந்து, அவர்கள் மூலம் தம் உயிரோவியப்படம் தீட்டுவிக்கப் பெற்றவர். தவிர,சென்னை ஆட்சியாளர் மாளிகையில் முன் கூடத்தில் பழைய ஆட்சியாளர்கள் அனைவரின் உயிரோவியப் படங்களும் நாற்புறமும் காட்சிக்காக வைக்கப்பெற்றிருந்தன. இரவிவர்மா வினிடம் பக்கிங்ஹாம் கோமகன் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக அவர் படம் தீட்டப்படவேண்டிய முறை வந்தபோது, இரவிவர்மாவிடமே அச் சீரிய பொறுப்பு அளிக்கப்பட்டது. இத்தகு சிறப்புப் பொறுப்புப் பெற்ற முதல்முதல் இந்தியர் அவரே.

இப்பொறுப்பை அளித்த பக்கிங்ஹாம் கோமகன் நட்புக்கு அவர் சரியான கைம்மாறு செய்தார். நேச உணர்ச்சியைக் கலைமதித்துணரும் திறமாக அவர் மாற்றினார். பக்கிங்ஹாம்