பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓவியக் கலைஞன் இரவிவர்மா

277

புராணங்களில் மக்கள் கொண்ட மதிப்புக்கு ஊறு விளை வியாமலே. இரவிவர்மா உருவங்களுக்கு அழகும் உணர்ச்சியுந் தனிப்பண்புகளும் ஊட்டி, மக்கள் உணர்ச்சிகளையுந் தூண்டினார். பிற்கால வங்கப் புதுமலர்ச்சி இயக்கக் கலைஞர்களும் இதே புராணப் பின்னணியைச் சித்திரிக்க நாடியுள்ளனர். ஆனால், அவற்றில் கலை இருக்க முடியுமே தவிரக் காவியம் இருக்காது. அவர்கள் படங்கள் மனித வாழ்வுக்கும் சமூகத்துக்கும் அப்பாற்பட்டு விடுகின்றன. அவை வாழ்க்கைத் தொடர்பற்ற உணர்ச்சிச் சித்திரங்களாய், கலைவல்லுநர் தவிர ஏனையோர் உணர்ச்சியைத் தூண்ட முடியாதவை ஆகிவிடுகின்றன. மேலும் ரவிவர்மாவின் பல்வேறு படங்களும் பல்வேறு தனித்தன்மையும் தோற்றமும் உடையன. புதிய கலைஞர்களைப் போல் அவர் ஒரே படிவத்தைச் சீதை, சகுந்தலை, திரோபதி யாவருக்கும் தருவதில்லை. ஒவ்வொரு படமும் இன்னார் என்று அறியக் கீழிருக்கும் பெயரை மட்டுமே நம்பவேண்டியது மில்லை. இவ்வகையில் இரவிவர்மாவின் கலை தென்னாட்டு இலக்கியப் பண்பை ஒட்டியது. வடமொழியிலும் பிற்காலத் தாய்மொழி இலக்கியத்திலும் எந்தப் பெண்ணும் ஆணும் உச்ச இலக்கணமுடைய ஒரே உயிர் வடிவமாக, ஒரே வகை உவமை களால் புகழப்படுவர். ஆனால், முற்காலத் தமிழ் நூல்களில் ஒவ்வொரு படிவத்துக்கும் ஒரு தனிப்பண்பும், நிறமும் தோற்றமும் கற்பிக்கப்பட்டிருப்பது காணலாம். இரவிவர்மாவின் கலை இங்ஙனம் வடமொழிப் புராணங்களுக்கும் தென் இந்திய வாய்மைப் பண்பு ஏற்றி அவற்றையும் அவற்றையும் கிட்டத்தட்ட உயிரோவியங்கள் ஆக்கியுள்ளன.

புதிய மன்னரின் தூண்டுதலால் இரவிவர்மா மற்றொரு காவியப் படத்தில் கருத்துச் செலுத்தினார். இதுவே ‘சீதையின் துறவு வாழ்க்கை'. மன்னன் இராமன் மக்கள் தூற்றுரை கேட்டுச் சீதையைக் காட்டுக்குத் துரத்தி விடுகிறான்; பெண்மைக்கு ஆடவருலகம் இழைக்கும் கொடுமையை நினைத்து, சீதை காட்டில் துயர் நினைவுகளில் ஆழ்ந்திருக்கிறாள். இதை மலையாளக் கவிஞன் குமாரனாசான் 'துயரிலாழ்ந்த சீதை' என்ற ஒரு காப்பியத்தின் நடுநாயகக் காட்சி ஆக்கியுள்ளார். இதே கட்டத்தை இரவிவர்மாவும் தம் ஓவியத்திரைக்கு இலக்காக்கினார். ச் சமயம் திருவாங்கூருக்கு வருகைதந்த இராஜா ஸர்.டி.