பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மக்கட் கலைஞர்

இரவிவர்மாவின் கலைத்திறமையின் புகழ் புராண காவியப் படங்களை மட்டும சார்ந்ததன்று. அவையில்லாமலும் உயிரோவியப் படங்கள், சமூகப்படங்கள் மூலம் அவர் உலகக்கலை வரலாற்றில் இடம் பெறுவது உறுதி. ஆனால், புராண காவியப்படங்களே அவர் புகழை இந்தியா முழுவதும், சிறப்பாக வடஇந்தியா முழுவதும் பரப்பிற்று. காவியங்களை ஒரு கலைஞன் நோக்குடன் கூர்ந்து நோக்கியவர் அவர் ஒருவரே என்பதையும், ஒரு தேசியக் கலைஞன் பாணியுடன் அதனைத் தீட்டியவரும் அவர் ஒருவரே என்பதையும் அவை காட்டுகின்றன.

1878-ல் அவர் தீட்டிய 'சகுந்தலையின் முடங்கல்'

வெள்ளையரான சென்னை ஆட்சியாளர் ஹோவார்டின் கண்களையே கவரப் போதிய தாயிருந்தது. ஆனால், அது அவர் புராணப்படப் புகழுக்கு ஒரு விடிவெள்ளி மட்டுமே. பரோடா மன்னர் மாளிகையை அணிசெய்ய அவர் வரைந்த பதினான்கு படங்களும் அத்துறையில் அவர் பல்வகைப் பெருக்கமுடைய முழுநிறை கைவண்ணத்தைக் காட்டின. இந்திய மாநிலமெங்கணும் சாதிமத வேறுபாடின்றி மன்னரும், குடிமக்களும், பெருமக்களும், பொதுமக்களும் அவர் படங்களைப்பெற அது முதல் அங்கலாய்த்தனர்.

கலைஞர் ஒருவர். அவர் கைகள் இரண்டு. ஆனால், அக் கைகளின் மாயப் படைப்புக்களைக் காணத்துடித்த கண்கள் எண்ணில. அவற்றைக் கைப்பற்றித் தமதாக்கச் செல்வர் மட்டுமன்றி ஏழையரும் விரும்பினர்.இரவிவர்மாவின் அருந்திறனை முதல்முதல் கண்டுபோற்றியவரும், அவர் புகழ் வளர்ச்சியில் ஈடுபட்டு அவருக்கு மிகவும் ஆதரவு காட்டியவருமான ஸர்.டி.மாதவராவ் இப்போது அவர் கலைப்படைப்புக்களைப் பொது மக்களுக்கும் எளிதாக வழங்கத்தக்க முறை ஒன்றை