282
அப்பாத்துரையம் - 5
வகுத்துத் தந்தார். பம்பாயில் ஒரு நெய்வண்ணப்பட அச்சகம் அமைக்கும்படியும், கலைப் படைப்புக்களின் அச்சடிப்படிகளை வாணிகமுறையில் பெருக்கிப் பரப்பும் படியும் அவர் தூண்டுதல் அளித்தார்.
இரவிவர்மா இச்சமயம் தன் படங்களின் படிகள் கேட்ட நண்பர்களுக்கெல்லாம் கைப்படி எடுத்துத்தர முடியாது வருந்திக்கொண்டிருந்தார். ஆகவே ஸர்.டி. மாதவராவின் புத்துரையை ஏற்று அதன்படி ஒரு அச்சகத்தை அமைத்தார். இந்தியாவிலேயே அமைக்கப்பட்ட முதல்முதல் நெய்வண்ண அச்சகம் அதுதான்.
இங்ஙனம் இந்தியாவின் முன்னணிக் கலைஞராகிய அவர் ந்தியாவின் முன்னணிக் கலைத்தொழில் முதல்வராகவும் அமைந்தார். அவர் வாழ்நாளின் பிற்பகுதி முழுவதிலும் அவர் பம்பாயையே தம் நிலவரத் தங்கிடமாக்கி, அத்தொழிலைக் கண்ணெனப் போற்றி வளர்த்தார். அவர் படங்கள் இந்தியாவின் பொதுமக்கள் இல்லங்களெங்கும் பரவத் தொடங்கியது இப்போதுதான்.
1892-ல் கலைஞர் பத்துப் படங்களடங்கிய ஒரு தொகுதியை வகுத்தமைத்து, அதனை அமெரிக்காவிலுள்ள சிக்காக்கோ கலைப்பொருட்காட்சிக்கு அனுப்பி வைத்தார். இங்கும் அவருக்கு இரண்டு தங்கப் பதக்கங்களும் பல நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இரண்டாண்டுகளுக்குப் பின் திருவாங்கூர் முதல் பட்டத்திளவரசர் மார்த்தாண்ட வர்மாவின் தோழராக அவர் மீண்டும் வட இந்தியாவெங்கும் சென்றுவந்தார். கலைஞரின் பரந்த அறிவாலும் பண்பாட்டாலும் அறிவிற்சிறந்த இளவரசர் பெரிதும் பயனடைந்தார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டில் இந்திய ஆட்சி முதல்வரான கர்ஸன் பெருமகனாரும் அவர் துணைவி யாரான கர்ஸன் பெருமாட்டியும் திருவாங்கூருக்கு எழுந்தருளி யிருந்தனர். கலைஞர் பெருமானும் அவர் உடன்பிறந்தாரும் திருவனந்தபுரத்துக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு அறிமுகப்படுத்திவைக்கப்பட்டனர். அவ் வருகை நினைவாகக் கர்ஸன் பெருமாட்டிக்குக் கலைஞர் தம் படங்களில் இரண்டைப் பரிசளித்தார். ஆட்சி முதல்வர் இக்கலைப் படைப்புக்களைக்