பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலப் புலவர்கள்

13

ஆண்பாற் புலவரும் உளர்; பெண்பாற் புலவரும் உளர். தமிழ்நாட்டு எல்லா வகை மரபுகளையும் சேர்ந்தவர் புலவராக இருந்திருக்கின்றனர். வெண்ணிக் குயத்தியார், ஒளவையார் (பாணர் மரபு), பேய் மகள் இளஎயினி, காவற்பெண்டு என்பவரும் கவிபாடும் ஆற்றல் பெற்று விளங்கினர் எனின், சங்க காலத் தமிழகக் கல்வி நிலையைத் தெளிவாக உணரலாம். அஃதாவது, அக்காலத்தில் எல்லா வகுப்பினரும் நன்றாகத் தமிழ்க் கல்வி பயின்றிருந்தனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகும். இங்ஙனம் சிறந்து விளங்கிய புலவர் பெருமக்கள் சிலருடைய வரலாறுகளை அடுத்து வரும் பகுதிகளிற் காணலாம்.

அடிக்குறிப்புகள்

1.

2.

3.

இன்றைய புதுச்சேரிக்கு அண்மையில் அரிக்கமேட்டில் புதையுண்டிருக்கும் நகரம் பழைய ‘பொதுசா'வாக இருத்தல் கூடும். அங்கு ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

இதன் பழைய பெயர் 'திருவாழும் கோடு' என்பது. அது திருவாங்கூர் என மருவி வழங்குகிறது.

இஃது இப்பொழுது பிரான்மலை எனப் பெயர் பெறும்.