பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓவியக் கலைஞன் இரவிவர்மா

293

அயலிலுள்ள காட்சிகளும் அரண்மனையை நினைவூட்டுகின்றன. அருகிலுள்ள தமயந்தியைவிட மடநோக்கும் மங்கைப் பருவ எழிலும் அரசிளங்குமரிக்குரிய தளதளப்பும் இன்ப நாட்டமும் உடைய வேறு அழகுவடிவை எண்ணியும் பார்க்கமுடியாது. ‘பாவம்' அல்லது மெய்ப்பாடு அவள் முகத்தில் மட்டுமன்றி உடல் முழுவதும் பொங்கி வழிகின்றது. அருகிலுள்ள மலர்களும் வாவியும் சலவைப்படிகளும் கூட அதே பாவத்தை வளர்க்க உதவுகின்றன.

தமயந்தியின் உடைகள் அவள் இளவரசி என்பதைக் காட்டுகின்றன.அதேசமயம் அவள் தனியே பகட்டாரவாரமின்றி அரண்மனை மலர் வனத்திலிருக்கும் நிலைமையையும் அவை சித்திரிக்கின்றன. இரவிவர்மாவின் கலை இங்ஙனம் வடிவழகை மட்டுமன்றி எல்லா மெய்ப்பாடுகளையும், சூழல் மரபையும் முழுமையாக எடுத்துக்காட்டுகின்றது. இவ்வழகைக் கண்டு நுகரக் கலைவல்லுநர் வேண்டியதில்லை. கீழே அதற்கான விரிவுரையோ பெயரோகூடத் தேவையில்லை. தமயந்தியின் கதையுணர்பவர்க்கு அவள் பருவம், அவள் கதைச்சூழல், அவள் பண்பு தவிர அதுவேறு எதுவுங் குறிக்க முடியாது. அப்படத்தைக் கண்டபின் நைடதம் படிப்பவர் அந்தப்படமாகவே தமயந்தியை உருவகப் படுத்தாமலிருக்க முடியாது.

நேர்மாறாக வங்கப்படத்தில் தமயந்தி, தமயந்தியாயில்லை. ஒரு பெண்ணாயிருக்கிறாள். அரசிளஞ் செல்வியாகவோ மடமங்கையாகவோ இல்லை. பம்பையான தலை, உடலை முற்றிலும் மறைக்காத ஆடை, மங்கைப் பருவத்துக்கு, மானிடப் பெண்ணின் உடலமைதிக்குப் பொருந்தாத வடிவம்! மொத்தத்தில் புராண நங்கையின் வடிவகற்றி அழகைமட்டும் குறித்துக் காட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், அழகு ஒரு சில கூறுகளால் மட்டும் தீட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்ணிமை காதலையும், உதடுகள் ஆர்வத்துடிப்பையும், நோக்கு பற்றுறு தியையும், நீண்ட விரல்கள் அழகையும் உயர்ந்தமுழங்கால்கள் தனிமையையும் குறிக்கும்படி காட்டப்பட்டுள்ளன. இங்கே கலையழகு தோன்றவில்லை. அழகுக்கலை தீட்டப்பட்டுள்ளது. து கலையன்று, அழகாராய்ச்சிமுறை மட்டுமே. கலையில் இது ஒரு பகுதியாக இடம்பெறத்தக்கது. உயர்பகுதியாக பெறவும் தடையில்லை. ஆனால், இரவிவர்மாவின் முழுநிறை

டம்