பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலப் புலவர்கள்

இளமையும் கல்வியும்

15

பிசிராந்தையார் இன்ன மரபினர் என்பது தெரியவில்லை. சங்கத்துச் சான்றோருள் பலர் மரபு அறியக்கூடாத நிலையில் இருந்திருக்கின்றனர். அவர் இளமையில், அக்காலத்திற்கு ஏற்ற முறையில், தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தக்க ஆசிரியரிடம் கற்றார். அவர்,

“கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.”

என்ற திருக்குறளின்படி, கல்வியறிவுடன் சிறந்த தெய்வ பக்தியும் உடையவராக விளங்கினார். ஆந்தையார் சிறந்த ஒழுக்கம் உடையவராகவும் திகழ்ந்தனர். ஆதலின், அறிவு - ஒழுக்கங்களிற் சிறந்த சான்றோர் அவரை மதித்து நடந்து வந்தனர்.

இல்லற வாழ்க்கை

பிசிராந்தையாருடைய நல்ல இயல்புகட்கு ஏற்றவாறு அவரது இல்லத்து உறுப்பினர் காணப்பட்டனர். அவரது மனைவியார் நிறைந்த கல்வியும் சிறந்த ஒழுக்கமும் உடையவர்; ஆந்தையாரது நற்பேறே பிறப்பெடுத்து வந்தாற் போன்றவர்; கணவர் சொற்படி நடப்பவர்; தாம் ஈன்ற மக்கட்குக் கல்வியறிவு தாமே புகட்டி வந்தவர்; அவர்களை இளமைதொட்டே நல்வழியில் நடக்குமாறு செய்து வந்தவர். பிள்ளைகளும், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்ற மறை மொழியை எண்ணிப் பெற்றோரைக் கண்கண்ட கடவுளராகக் கருதி வழிபட்டு வந்தனர். இங்ஙனம் இல்லத்து அரசியாகிய மனைவியும் மக்களும் சிறந்த ஒழுக்க முடையவராய்ப் புலவர் பெருமான் விருப்பம் போல் நடந்துவந்த காரணத்தால், புலவரது இல்லறம் நல்லறமாக நடந்து வந்தது.

66

2. பழகா நட்பு

கோப்பெருஞ் சோழன்

ஆந்தையார் பாண்டிய நாட்டில் பண்புடன் வாழ்ந்த காலத்தில், சோழ நன்னாட்டைக் கோப்பெருஞ் சோழன் என்ற அரசர் பெருமகன் ஆண்டு வந்தான். அவனது தலைநகரம்