சங்க காலப் புலவர்கள்
ன்
21
“வெற்றி வேந்தே, இப்பொழுது நின்னுடன் போர் செய்ய வந்திருப்பவர் வேற்று நாட்டரசராகவுள்ள சேர, பாண்டியர் அல்லர். நீ அவர்கட்குப் பகை அரசனும் அல்லை. நீ இந்நிலவுலகில் புகழை நிறுத்தி இறப்பாயாயின், இவ்வரசாட்சி அவர்கட்கே உரியதாகும். நீயே இதனை நன்கு அறிவாய். நின்னுடன் போர் செய்ய வந்த நின் அறிவிலாத மக்கள் தோற்பதாக வைத்துக் கொள்வோம்; பிறகு இவ்வரசாட்சியை நீ யாருக்குக் கொடுப்பாய்? 'தந்தை தனயருடன் போரிட்டு வென்றான்' என்னும் வசை நிற்குமே தவிர வேறில்லை. நீ அவர்க்குத் தோற்பாயாயின், நின் பகைவர்க்கு மகிழ்ச்சி உண்டாகும்; நினக்கு வசையே உண்டாகும். இங்ஙனம், எம்முறையிற் பார்ப்பினும், இப்போர் நிறுத்தப்படல் வேண்டும்; நினது பகைமைக்குணம் மாற வேண்டும். நீ தேவர் நன்னாட்டு விருந்தாகச் செல்லற்குரிய நல்வினையைச் செய்வாயாக." என்று அரசன் உளங்கனிய இனிய முறையில் எடுத்தியம்பினர்.
அரசன் துறவு
கோப்பெருஞ் சோழன் இயல்பாகவே பற்றற்றவன். அவனுக்குப் புலவர் பொன்னுரையும் சீற்றம் மிகுந்த சமயத்தில் வேண்டியதாக இருந்தது. அவன் உள்ளம், புலவர் போதனைக்குப் பிறகு தெளிந்தது. அவன் அரசாட்சியைத் தன்மக்களிடம் ஒப்புவித்தான்; துறவுக் கோலம் பூண்டான்; உண்ணா நோன்பு பூண்டு வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தான். ஆற்று இடைக் குறையில் உள்ள ஒரு மரநிழலில் சென்று தங்கி, உண்ணா நோன்பைத் தொடங்கினான்.
வடக்கிருத்தல்
5. அரசனும் ஆந்தையாரும்
இங்ஙனம் அரசன் வடக்கிருத்தலை அறிந்த சான்றோரும் பிறரும் அரசன்பால் வந்து குழுமி, அவனைப் பிரிய மனம்இல்லாது அவனை சூழ அமர்ந்திருந்தனர். அப்பொழுது அரசன் அவர்களை நோக்கி, “என் ஆருயிர் நண்பரான பிசிராந்தையார் இப்பொழுது வருவர்; அவர்க்காக இடம் விட்ட