26
அப்பாத்துரையம் – 5
கல்லிலும் அவரவர் உருவம், பெயர், சிறப்பியல்புகள் இவை பொறிக்கப் பட்டன; பின்னர் அவை நன்னீரில் தூய்மை செய்யப்பட்டு நடப்பட்டன. இச் செயல் ‘கல் நாட்டு விழா" எனப் பெயர் பெறும்.
7. பொத்தியார் நட்பு
பொத்தியார் வடக்கிருத்தல்
பொத்தியார் என்ற அருந்தமிழ்ப் புலவர் கோப்பெருஞ் சோழனுக்கு நெருங்கிய நண்பர் அல்லவா?' அவர் ஏன் வடக்கிருக்கவில்லை?' என்று நீங்கள் கேட்பீர்கள் அல்லவா? அவர் வடக்கிருக்க விழைந்தபொழுது கோப்பெருஞ் சோழன் அவரைத் தடுத்து, "பிள்ளைப் பேறு இல்லாதவர் துறக்கம் புகுதல் அருமை' என்று நூல்கள் கூறுகின்றன. ஆதலால், பிள்ளைப்பேறு உண்டான பிறகு நீங்கள் வடக்கிருக்கலாம்; இப்பொழுது அவ்வாறு செய்யவேண்டா" என்றான். புலவர் அரசன் கூற்றுப்படி, தம் ஊரை அடைந்தார்; மனைவி கருவுயிர்த்து ஆண் மகவு ஒன்றினை ஈன்றாள். புலவர் மனம் மகிழ்ச்சியுற்று. அவர் ஓடோடியும் உறையூர் வந்தனர். அரசனும் ஆந்தையாரும் கல்லானதைக் கண்டனர்; அகம் கரைந்தனர்; கரைந்து, கண்ணீரை ஆறாக வடித்து, அரசனது நடு கல்லின் எதிரில் நின்று,
"பிள்ளைப்பேறு, உண்டான பின் வருக' என்று சொல்லி, யான் அங்ஙனம் வருவதற்குள் உயிர் விட்டுக் கல்லான உத்தமனே, எனக்கு இடங் கொடுப்பாயாக,” என்று கூறி, அங்கு வடக்கிருந்து, உண்ணா நோன்பு அநுசரித்து உயிர் விட்டனர். ஆ! உத்தம நட்பினர் தியாகத்தை என்னென்பது!
அடிக்குறிப்பு
1. இந்தப் பழைய வழக்கம், இன்றும் தமிழர் வீடுகளில் கருமாதி சமயத்தில் 'கல் நடப்பு’ அல்லது 'கல் எடுப்பு' என்று கூறப்படுகிறது.