32
அப்பாத்துரையம் - 5
விடுதலை செய்து, அவருக்குப் பரிசில் தந்து மகிழ்வித்தான். இளந்தத்தர் அரசனுக்கும் தம்முயிரைக் காத்த புலவர் பெருமானுக்கும் மனமார நன்றிகூறி விடைபெற்றுச் சென்றார். கோவூர்கிழார் அரசனை உளமார வாழ்த்தித் தம் இருப்பிடம் ஏகினார்.
5. உறையூர் முற்றுகை
உறையூர் முற்றுகை
மேற்கூறிய நிகழ்ச்சிக்குப் பிறகு நலங்கிள்ளி பெரும் படை யுடன் சென்று உறையூரை முற்றுகையிட்டான். நெடுங்கிள்ளி சினம் கொண்டான்; தன்னை விடாது பின்பற்றி வரும் நலங்கிள்ளியை ஒழிக்க விரும்பிக் கடும்போர் புரிந்தான்.போரில் இருதிறத்துக் கரிகளும் பரிகளும் மாண்டன; வீரர் பலர் இறந்தனர்; பலர் கை, கால் முதலிய உறுப்புகள் இழந்து தவித்தனர். உறையூர்குடிகள், இக்கோரக் காட்சியைக் கண்டு உள்ளம் நடுங்கினர்.
புலவர் இடையீடு
இச்சங்கடமான நிலையிலும் நமது கோவூர்கிழார் தோன்றினார். அன்பே உருக்கொண்ட அப்பெரியார் இக்கோரக் காட்சியைக் கண்டு நடுங்கினார். அவர் மனம் பதறியது; ஒரே மரபிற் பிறந்த கற்றுவல்ல அறிஞராகிய இருவர் தமது பகைமை காரணமாகப் பொது மக்களையும் உயிர்களையும் துன்பத்திற்கு உள்ளாக்குதல் அறியாமை என்று எண்ணினார். அப்பெருந்தகையார் நலங்கிள்ளியை நன்முகத்துடன் நோக்கி,
“பகைவர்க்கு நமனைப் போன்ற அரசே, நான் கூறுவதைச் சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டுகிறேன். இப்பொழுது உன்னுடன் போர் செய்கிறவன் பனம்பூ மாலை அணிந்த சேர வேந்தன் அல்லன்; வேப்பம்பூ மாலையை அணிந்த பாண்டியனும் அல்லன். நீயோ ஆத்திமாலையை அணிந்திருக்கின்றாய்.நின்னை எதிர்ப்பவனும் அதே மாலையை அணிந்தவன். அஃதாவது, நீங்கள் இருவரும் ஒரு குடியைச் சேர்ந்தவர். உங்களில் ஒருவர் தோற்பினும், தோற்பது நுமது குடியே அன்றோ? நீங்கள்