சங்க காலப் புலவர்கள்
-
35
மாநகரத்தை அளிப்பினும் அளிப்பான்; அழகிய நம் விறலியர் சூடும் மலருக்கு விலையாகப் பாண்டியனது மாடமதுரையைத் தரினும் தருகுவன்; இவ்வுலகத்தின் உரிமையை ஆராய்ந்து பார்த்தால், இந்நாடு, வேட்கோவர் இளைஞர் கலம் வனைதற்குச் சக்கரத்தில் வைத்த பச்சை மண் திரள்போல சோழர் பெருமானது கருத்தின் முடிபை உடையதாயிருக்கின்றது,” என இவ்வாறு கோவூர் கிழார், புலவனும் புரவலனுமான நலங்கிள்ளியின் வீரம், வள்ளன்மை முதலிய நற்பண்புகளைப் பாராட்டி மகிழ்ந்திருந்தார்.
கிள்ளிவளவன்
7. புலவரும் கிள்ளி வளவனும்
இவன் நலங்கிள்ளியின் தமையன் என்று கருதப்படுகிறான். இவன் காவிரிப்பூம்பட்டினத்தை தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் வடபகுதியை ஆண்டு வந்தான் போலும்! இவன் காலத்தில் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு மலை நாட்டை மலையமான் திருமுடிக்காரி என்றவன் ஆண்டனன். அவன் கபிலர் முதலிய புலவர் பெருமக்களால் புகழ்ந்து பாடப் பெற்றவன். அவனுக்கும் கிள்ளிவளவனுக்கும் பகைமை ஏற்பட்டது. அதன் காரணமாகச் சோழன், எவ்வாறோ அம்மலையமான் மக்கள் இருவரைச் சிறைப்பிடித்துக்கொணரச் செய்தான்;காரிமீது தனக்கு உண்டான பகைமையை அவன் மக்களைக் கொன்று தீர்த்துக் கொள்ளலாம் என்று கருதினான்; கருதி, அம்மக்களை யானையால் இடறும்படி செய்து கொல்லத் தீர்மானித்தான்.
கோவூர் கிழார் இடையீடு
கிள்ளி வளவனது கொடிய தீர்மானத்தைக் கேள்வியுற்ற கோவூர் கிழார்,விரைந்தோடிச் சென்று அவனைக் கண்டு,
“அரசர் பெருமானே, நீ, ஒரு புறவினுக்காகத் துலாக்கோல் புகுந்து அதன் துன்பத்தைத் தீர்த்த சிபி என்னும் அரசர் பெருந் தகையின் மரபில் வந்த பெருமையுடையவன். இச் சிறுவர்கள், அறிவால் உழுது உண்ணும் புலவரது வறுமையைக் கண்டு வருந்தி, அதனைத் தீர்ப்பதற்குத் தமது செல்வத்தைப் பகுத்துண்டு