46
அப்பாத்துரையம் - 5
திருமுடிக்காரி என்பவன். இவனைப் பற்றிச் சென்ற பிரிவிற் கூறப்பட்ட தன்றோ? இவன் வள்ளன்மையிற் சிறந்திருந்தாற் போலவே வீரத்திலும் சிறந்து விளங்கினான். இவனது பெரு நாடு விரிதல் அதியனது நாட்டிற்கு ஆபத்தாகும். ஆதலின், அதியமான் வனை விரைவில் ஒடுக்கத் தீர்மானித்தான்; தன் பண்பட்ட படைகளைத் திரட்டிச் சென்று திருக்கோவலூரைத் தாக்கினான்.
பெருவீரனான காரி தன் குதிரை மீது ஏறிப் போர்க்களம் குறுகினான். இருதிறத்துப் படைகட்கும் கொடிய போர் நடை பெற்றது. அதியனும் காரியும் வீராவேசத்துடன் மலைந்தனர். அதியமான் காரியைவிடச் சிறந்த போர்வீரன் ஆதலாலும், கொங்கு வீரர் போர்ப் பயிற்சி மிக்குடையார் காரியின் படை வன்மை வரவரக் குறையத் தொடங்கிற்று. பல உயிர்கள் வீணாக மதிலைக் கண்ட ஒளவையார், காரியைப் போரை விடுமாறு தூண்ட விரும்பினார்; விரும்பி அவன் வீரரை நோக்கி,
ஔவையார் அறிவுரை
66
அதியமான் போர் செய்ய விரும்பி உரையிலிருந்து உருவிய வாட்கள், பகைவரது தசையில் மூழ்கிப் பதிந்து நுனி தேய்ந்து அழகு கெட்டன.அவனுடைய வேல்கள் குறும்பருடைய அரண்களை வென்று, அவர் தம் நாட்டை அழித்தலால் காம்பும் ஆணியும் ஆட்டங் கண்டு கெட்டன. பகைவருடைய கோட்டைக் கதவுகள் கணைய மரத்தால் தடுக்கப்பட்ட கதவுகளை உடையன. அவற்றைக் குத்தலால் அதியமானுடைய யானைகளின் பெரிய கொம்புகளிற் பூட்டிய பூண்கள் கழன்றன. அவனுடைய பரிகள், போர்க்களததில் போரிட்ட வீரருடைய மார்பு உருவழியும்படி ஓடி உழக்குதலால், இரத்தக் கறைபட்ட குளம்புகளை உடையவாயின. அதியமான் பெரிய படையை உடையவன்; கழல் வடிவாகவும் கிண்ணி வடிவமாகவும் செய்யப்பட்ட கேடயம் உடையவன். அக்கேடயத்தில் அம்புகள் துளைத்த துளைகள் பலவாகும். இத்தகைய பகை வன்மையுடைய அரசனால் கோபிக்கப்பட்டவர் பிழைத்தல் அரிது! மருதவளம் செறிந்த உங்கள் ஊர்கள் உங்களுக்கு உரியவாக வேண்டும் என்பதை விரும்புவீராயின்,அவனுக்குக் கப்பம் கட்ட வேண்டும்; அதைக் கட்ட மறுப்பீராயின் அவன் உங்களை விடக் கூடியவன் அல்லன். அவனது பேராற்றலை நான் அறிந்தவாறு சொன்னேன். அதனை