பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

அப்பாத்துரையம் - 5

மலர் முகத்தைக் கண்டு மகிழ்ந்தான். அப்பொழுது அவன் அருகில் இருந்த நமது மூதாட்டியார் உளம் மகிழ்ந்து,

66

அரசனது கையில் வேல் இருக்கின்றது; கால்களில் வீரக் கழல்கள் இருக்கின்றன. உடம்பில் பகைவரால் உண்டாக்கப்பட்ட புண்கள் இருக்கின்றன. கழுத்தின் மீது ஈரம் புலராத பசிய புண் இருக்கின்றது.குடுமியில் பனந்தோடும் வெட்சி மலரும் வேங்கைப் பூவும் இருக்கின்றன. பகைவரை வெகுண்டு பார்த்த கண், தவப் புதல்வனைத் தரிசித்த பிறகும் சிவப்பு நீங்கவில்லை. ஆதலின், வனது சினத்திற்கு ஆளான பகைவர் தப்புதல் உண்டோ!" என்று அவனது வீரப் பொலிவைப் பாராட்டி மகிழ்ந்தார்.

5. காரி - அதிகன் போர் - II

காரியும் சேரனும்

அதியமான் தகடூரில் தங்கி இருக்கையில், அவனிடம் தோல்வியுற்ற மலையமான் தனது உயிர் நண்பனான சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்பவனைத் துணைபுரிய வேண்டினான். அச்சேரமான் பலமுறை காரியின் உதவி பெற்றவனாவன். ஆதலின், அவன் உடனே காரிக்கு உதவிபுரிய முன் வந்தான்; சேரநாட்டுச் சிறப்புடைய வீரர்களைக் கொண்ட படையைத் திரட்டிக் கொண்டு கொங்கு நாட்டின் மீது படையெடுத்தான். அவன் கொல்லிமலைத் தலைவனான வல்வில் ஓரியின் வலியை அடக்கி, அவன் அதியமானுக்கு உதவி சய்யாதவாறு தடுக்க விரும்பினான்; அதனால் முதலில் கொல்லிமலை நாட்டைத் தாக்கினான்.

சேரமான் வெற்றி

இஃதறிந்த அதியமான் சேரனை நையப் புடைக்கத் தக்க சமயம் அதுவே என்றெண்ணித் தன் படைகளைத் திரட்டிச் சென்றான். கொல்லி மலை நாட்டில் ஓரியும் அதியனும் ஒருபுற மாகவும் சேரனும் காரியும் மற்றொருபுறமாகவும் நின்று மலைந்தனர். போர் மிகவும் கடுமையாக நடந்தது. அதியமானுக்கு உதவியாகச் சோழ பாண்டியரும் வந்து போரில் கலந்து கொண்டனர்.அதனால் அப்போர் பெரும்போரின் தன்மையை