சங்க காலப் புலவர்கள்
51
கண்மணிப் பாவையின் ஒளியை மழுங்கச் செய்துள்ளது; நுண்ணிய சொல் ஆராய்ச்சியுடைய புலவரது நாவிற் சென்று தைத்துள்ளது.எமக்கு ஆதரவாக இருந்த எமது இறைவன் எங்குச் சென்றிருக்கிறான்? அவன் இல்லாததால், இனி இத் தமிழகத்தில் பாடுவோர் இல்லை; பாடுவோர்க்கு ஒன்று ஈவோர் இல்லை. குளிர்ந்த நீர்த்துறையில் உள்ள பகன்றைப் பூவைப் பறித்துச் சூடுவார் இல்லாததால் அது வீணாகின்றது. அதுபோலப் பிறர்க்கு வழங்கிப் பயன் நுகராது மாளும் மக்கள் பலராவர். எம்மரசன் அவர் போன்றவன் அல்லன். அப்பெருமானை விட்டு எங்ஙனம் பிரிந்திருப்போம்!”
66
'அதியமான் இல்லாததால் நாட்கள் கழித்தல் அருமை; ஆதலின், அவன் இல்லாத காலையும் மாலையும் இல்லையாகுக; அவன் இன்றி யான் உயிர் வாழ்தல் பயனில்லை; ஆதலின் என் வாழ்நாட்கள் விரைவில் ஒழிந்து போவனவாக; அதியமான் தாயத்தாரால் கொடுக்கப்பட்ட நாட்டை வேண்டா என்று சொன்னவன். அத்தகையவன், நடுகல்லில் மயிற் பீலியைச் சூட்டிப் படைக்கும் படையலை ஏற்பானோ, ஏற்கானோ!
இங்ஙனம் ஔவையார் துயரமடைந்தபொழுது அதியமான் உடல் ஈமச் சிதை மீது வைத்து எரியூட்டப்பட்டது. அது கண்ட ஒளவையார்,
“ஈமத்தீ இவ்வள்ளியோனது உடலைச் சிதைக்காமல் அவியினும்” அவிக; அன்றிச் சிதையும்படி ஓங்கி எரியினும் எரிக; ஞாயிற்றை ஒப்போனது புகழ் உடம்பு ஒரு காலத்திலும் அழியாது,” என்று அவனது புகழைப் பாராட்டிக் கண்ணீர்
விட்டனர்.
பொகுட்டெழினி
இவன் அதியமான் மகன். இவன் தந்தை இறந்த பிறகு அரசனாக முடிசூட்டப்பட்டான். இவன் மிக்க இளையவன் ஆதலின், அரசியல் அநுபவம் வாய்ந்த பெரியோர் உடனிருந்து நாட்டை ஆண்டுவந்தனர். ஔவையார் அவனை நல்வழிப்படுத் தினார்; அவனுடைய கல்விச் சிறப்பு, கொடைச் சிறப்பு முதலியன தோன்றப் பாடி,அவனை நன்முறையில் நடத்தி வந்தார்.