54
அப்பாத்துரையம் - 5
பறம்பு நாடு பகைவர் கைப்பட்டது. கபிலர் தம்மிடம் மாணவி களாக இருந்து கவிபாடும் ஆற்றல் பெற்ற பாரி மகளிர் இருவரை உடன் அழைத்துக் கொண்டு பறம்பு மலையை விட்டு வெளிப் பட்டார்; அம்மகளிரை மணந்து கொள்ளுமாறு சிற்றரசர் பலரை வேண்டினார். அவர்களை மணப்பின் பேரரசர் பகைமை ஏற்படலாம் என்று அஞ்சிய அச்சிற்றரசர் மணத்திற்கு சையவில்லை. மனம் வெறுத்த கபிலர் திருக்கோவலூரை அடைந்து, பார்ப்பார் சிலரு பாதுகாவலில் தம் மாணவியரை விட்டு, பாரியை நினைந்து உள்ள முருகித் தீப்பாய்ந்து இறந்தார்.
ஔவையாரும் பாரி மகளிரும்
ஒளவையார் இந்த விவரங்களை எல்லாம் நன்கு அறிந்தார்; உடனே திருக்கோவலூர் விரைந்து சென்றார்; பாரி மகளிரைக் கண்டார். அம்மகளிர் புலவரை முன்னரே நன்கு அறிந்தவர் ஆதலின், தம்மால் இயன்ற அளவு நன்றாக உபசரித்தார். அம்மையார் அவர்களது இரங்கத்தக்க நிலையைக் கண்டு மனம் வருந்தினர்; முல்லைக்குத் தேர் ஈந்த பெரு வள்ளலான பாரி மகளிர் தமது அரச போகத்தை இழந்து வறிய நிலையில் இருத்தலைக் காண எவர் மனந்தான் உருகாது! அம்மையார் அங்குப் பல நாள் தங்கி அவர்கள் மணத்தை முடித்தனர் என்பது கூறப்படுகின்றது.
10. முடிவுரை
இங்ஙனம் ஔவை மூதாட்டியார் தம் கல்விச் சிறப்பாலும் ஒழுக்க மேம்பாட்டாலும் தமிழ்நாட்டுப் பேரரசர். சிற்றரசர் - குடி மக்கள் இவர்தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டார்; தமது திருந்திய நாவினாற் பல பைந்தமிழ்ப் பாக்களைப் பாடினார். அப்பாடல்கள் மேற்சொன்ன சங்க நூல்களில் சிதறுண்டு கிடக்கின்றன. நீங்கள் பெரியவர்களான பிறகு அவற்றைப் படித்துப் பயன் பெறுக. இங்ஙனம் தமிழகம் மதிக்கத் தக்கவாறு பெண்பாற்புலவர் பலர் நமது தமிழ்நாட்டில் ஆயிரத்தொண்ணூறு ஆண்டுகட்கு முன் இருந்தனர் என்பதை நினைவு கொள்ளுக. இத்தகைய புலமையுடைய தமிழ்ப் பெண்மணிகள் தோன்றினாற் றான் நமது மொழியும் சமூகமும் சிறப்புடையும்.