தளவாய் அரியநாத முதலியார்
77
பெற்றனர். அஞ்சா நெஞ்சம் படைத்த அரியநாயகர் அக்கூடத்தில் சேர்ந்து பயிற்சி பெறலானார். அவர் பதினாறு வயதிற்குள் உடற்பயிற்சி விளையாட்டுகளையும் போர்ப் பயிற்சி விளையாட்டுகளையும் குறைவறக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். அவரே அவ்வூர் இளைஞருள் கல்வியிலும் பிற பயிற்சிகளிலும் முதல்வராக விளங்கினார். அதனால் இளைஞர் அனைவரும் அவரைப் பாராட்டினர்; தங்கட்குத் தலைவராக அவரை மதித்து அன்புடன் நடந்து வந்தனர்.
ஒரு நாள் மாலை
மெய்ப்பேட்டுப் பிள்ளைகள் ஒரு நாள் மாலை ஊர்வெளியில் மற்போர், சிலம்பப் பயிற்சிகளைச் செய்து கொண்டு இருந்தனர். அப்பொழுது அவ்வழியே சாஸ்திரியார் ஒருவர் வந்தார். அவர் கைரேகை, சோதிடம் முதலியவற்றில் வல்லவர். அவர் பிள்ளைகள் விளையாட்டுகளைக் கவனித்தார். அரிய நாயகரின் விளையாட்டில் அவர் கருத்துச் சென்றது. அவர் அவரைக் கூர்ந்து கவனித்தார்; அவரை நெருங்கி, “தம்பீ, நான் சிலம்பத்தில் உன் கை வண்ணம் கண்டேன்; உனது கைரேகை வண்ணத்தையும் காண விரும்புகிறேன், காட்டு என்றார்."
வருவது உரைத்தல்
அரியநாயகர் பெரியோரிடம் மிக்க மதிப்புடையவர்; வணக்க ஒடுக்கம் உடையவர்; அதனால் அவர் அப்பெரியவரை முதலில் வணங்கினார்; பின்னர்ச் சிறிது வெட்கத்துடன் தம் கையைக் காட்டினார். இரேகை சாஸ்திர நிபுணர் சிறுவர் கையை உற்று நோக்கினார். அரியநாயகர் அவரது முகத்தை உற்று நோக்கினார். முதியவர் முகம் நொடிக்கு நொடி வேறு பட்டது. முடிவில் அப்பெரியவர் அரியநாயகரைப் பார்த்து.
66
"அப்பனே, நான் சொல்வதைக் கேள்; உனக்குச் சிறந்த அரசயோகம் இருக்கின்றது. நீ அரசரால் நன்கு மதிக்கப்படுவாய்; குடிகளால் போற்றப்படுவாய். அரசரை ஆக்கும் சக்தி உனக்கு உண்டாகும். உன்னால் இந்நாடு சிறப்படையும். உனது பெயரும் புகழும் இந்நாட்டில் என்றும் நிலைபெறும். நீ இச்சிறிய கிராமத்தில் இருத்தல் ஆகாது. நீ உடனே விஜயநகரம் செல்;