2 விஜயநகரப் பேரரசு
இந்தியாவில் முஸ்லிம்கள்
ா
வட இந்தியா கஜ்னி முஹம்மது படையெடுப்புகளினால் நிலை தளர்ந்தது. வட இந்தியாவில் இருந்த இராஜபுத்திரரும் தமக்குள் ஒற்றுமை இன்றிச் சச்சரவிட்டுக் கொண்டு இருந்தனர். எல்லா அரசனையும் அடக்கி ஆளத்தக்க பேரரசன் அப்பொழுது வட இந்தியாவில் இல்லை. அதனால் அயல்நாட்டு முஸ்லிம்கள் எளிதாக இந்தியா வரலாயினார்; ஒற்றுமையற்ற அரசருள் ஒருசாரார் துணையைக் கொண்டு இந்தியாவில் முஸ்லிம் ஆட்சியை நிலைநாட்டினர். பின்னர்ச் சிறிது சிறிதாக வட இந்தியா முழுவதையும் தங்கள் ஆட்சிக்குக் கொணர்ந்தனர்.
தக்ஷிணத்தில் முஸ்லிம் ஆட்சி
முற்பாதியில்
கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் தக்ஷிணத்தில் பெரிய முஸ்லிம் படையெடுப்புகள் அடிக்கடி ஏற்பட்டன. அப் படையெடுப்புகளால் விந்தமலைக்குத் தெற்கே இருந்த யாதவர், காகதீயர், ஹொய்சளர், பாண்டியர் நிலை தளர்ந்தனர். யாண்டும் கொள்ளையும் குழப்பமும் நிலவின. முஸ்லிம் ஆட்சி தக்ஷிணத்தில் ஏற்பட்டது. மதமாற்றம் முதலியன நடைபெற்றன.இம்மாறுபாடுகளைக் கண்ட இந்துப் பெருமக்கள் மனம் புண்ணாயினர். இந்து மதத்தைக் காக்கத்தக்க பேரரசு ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்று அப்பெருமக்கள் சிந்திக்கலாயினர்.
விஜயநகர அரசு
அப்பெருமக்களுள் ஹரிஹர ராயர், புக்க ராயர் என்ற இரு சகோதரரும் சிறந்தனர்.! அவர்கள் இருவரும் துங்கபத்திரை