பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. தலைவர் பெருந்தகை வாழ்க்கையின் படிப்பினைகள்

ஒளிகளிடையே ஒரு மின்னொளி

இந்தியா பெரியார்கள் எண்ணற்றவரை ஈன்றுள்ள மாபெருந்தேசம். அது கிட்டத்தட்ட ஒரு பெரிய கண்டமென்னும் படியான பரப்பும் உலகிடையே உள்ளமைக்கப்பட்ட ஒரு குட்டியுலகமென்னும் படியான நாகரிகப் பெருக்கமும் உடையது. அதோடு அதன் வரலாறு பல்லாயிரக்கணக்கான ஆண்டு தொடர்ந்த வளர்ச்சியுடையது. எல்லையற்ற இவ்விருகைப் பரப்புகளிடையே பெரியார்களைத் தோற்றுவிக்காத நிலப் பகுதியோ பெரியார் ஒளியால் விளக்க முடியாத நூற்றாண்டோ கிடையாதென்னலாம். அப்பெரியார்களில் பலர் இந்திய வானிடையே மிளிரும் விண்மீன்களாக மட்டுமிராமல் உலகெங்கும் ஒளி திகழும் விரிகதிர் விளங்கங்களாய் உலகப் பெரியர்களாகவும் விளங்கியுள்ளனர். அவர்களிடையே திருவள்ளுவர் பெருமான்,புத்தர்பிரான் முதலான அறிவுத் துறைப் பெரியர், அசோகன், சிவாஜி போன்ற பேரரசர், காந்தியடிகள், விவேகானந்தர் போன்ற மக்கள் தலைவர் என எல்லாத் துறைகளிலும் பெருமையுடையவர் தோன்றியுள்ளனர். ஆனால் இத்தனை விளக்கங்களிடையேயுங்கூட மின்னல் போல் திடுமென தோன்றி நாட்டையும் உலகையும் திகைக்க வைத்து திடுமென மறைந்துவிட்ட பெரியார் போஸைப் போல எவருமிலர். அவர் வாழ்க்கை தந்த திகைப்பிடையே அவர் பெருமையை நாம் முற்றிலும் உணர நமக்கு இன்னும் பல காலம் சென்றுவிடக் கூடும்.

அடிமை மனப்பான்மையை அறவே ஒழித்தவர்

போஸ் வாழ்க்கையில் நாம் காணத்தகும் முதல் படிப்பினை அடிமை மனப்பான்மையை ஒழித்து இந்தியர் வாழ்வது என்பதை