பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
90 ||

அப்பாத்துரையம் - 6



அரசியலுக்குக் குந்ததகமாயிருந்தது. அதே சமயம் அவர் அரசியல் வாழ்வு அவர் சமயப்பற்றை இயங்க விடாமல் செய்தது. இராஜாராம் மோகன்ராயிடம் சமயப்பற்று அரசியல் உணர்வால் புதுமை பெற்றது. ஆனால் ஸி.ஆர்.தாஸ், போஸ் ஆகிய இருவர் வாழ்விலும் சமயப்பற்று தூய்மையானதாய் எதனாலும் கெடாதிருந்தது. அரசியலார்வமும் தூய்மையாய் இருந்தது. ஒன்று மற்றொன்றை அழிக்க முடியவில்லை. உலகின் கண்களுக்குப் புரட்சி வீரராகக் காட்சியளித்த போஸ் ஒருவரே வாய் பேசா சக்தியாராதனையாளராக இல்லற வாழ்வு பற்றிய சிந்தனையையே விடுத்து நாட்டுப்புகழ் என்னும் நங்கைக்கே தம் வாழ்வை அர்ப்பணித்திருந்தார் என்பது கவனித்தற்குரியது.


 ❖   ❖   ❖