1. புரட்சியை வளர்ப்பது?
(கிழக்காசிய இந்தியச் சுதந்திரக் கழக மகாநாடு 21-10-43 இல் சிங்கப்பூர் தைதோவா கெகிஜோவில் நடைபெற்றபோது, அதற்குத் தலைமை வகித்து நேதாஜி ஆற்றிய தலைமை யுரை)
நண்பர்களே!
சென்ற ஜூலையில் நடந்த நமது சந்திப்பின் பிறகு, என்னென்ன முன்னேற்றம் என்னென்ன அருஞ்செயல்கள் நேர்ந்துள்ளன வென்பதையும் இனிமேல் கையாள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன வென்பதையும் மதிப்பிடுவதற் காகவேதான் இம் மகாநாடு. கிழக்காசிய இந்தியச் சுதந்திரக் கழகத் தலைமைப் பதவியை நான் ஏற்றுக்கொண்டதும், முதன் முதலில் தலைமைக் காரியாலயத்தைத் திருத்தியமைக்கவே முழுக்கவனமும் செலுத்தினேன். அதில் பல புதிய இலாகாக்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. சர்வ ஜன சக்தியையும் சாதனங் களையும் ஒன்று திரட்டும் கொள்கை இங்கு இடம் பெற்று விட்டது. இந்த அஸ்திவாரத்துடன் கிழக்காசிய முழுமையிலுள்ள கிளை ஸ்தாபனங்களும் திருத்தியமைக்கப் பெற்றிருக்கின்றன. சர்வாம்சப் படை திரட்டல் கொள்கை எங்குமே அமலுக்கு வந்து விட்டது.
அடுத்த படியாக, இந்திய தேசீய ராணுவம் (ஆஸாத் ஹிந்த் பெளஞ்) திருத்தியமைக்கப்பட்டு விட்டது. இன்னும் பல மாறுதல்கள் செய்ய நேரலாம். முன்னைவிட இப்பொழுது நம் ராணுவத்தின் உத்சாகமும் பலமும் அதிகரித்திருக்கின்றன வடதிசை நோக்கி ஏதேனும் ஒரு படை அனுப்பப்படும் போதுதான். அப் படையினரின் மகிழ்ச்சியும் உத்சாகமும் வெளியாகும். நம் வீரர்கள் “டில்லி செல்லுவோம்” என்னும் மந்திரத்தையே சதா உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை