பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
94 ||

அப்பாத்துரையம் - 6



உறுதி கூறுகிறேன். இப்பொழுது அவர்களுக்கு இயந்திரப் பயிற்சி தந்து செயலுக்குத் தயாராக்குவதுடன். ராணுவ விஸ்தரிப்பு வேலையும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.எதிர்பார்த்தபடி, இராணுவத்தில் புதிதாகச் சேர்ந்தவர்களும் உற்சாகமாகவே இருக்கிறார்கள்.

மலேயா முழுதும் பயிற்சி முகாம்கள் இருக்கின்றன. புதிதாக ராணுவத்தில் சேர முன் வருபவர்களின் எண்ணிக்கையைக் கவனித்தால், அம் முகாம்கள் போதா. அவர்கள் எல்லோருக்கும் பயிற்சியளிக்கும் நிலைமையில் நாம் ல்லையென்றே சொல்ல வேண்டும். ஆனால், அவர்கள் ஒவ்வொருவருடைய தேவையையும், உடனுக்குடன் கவனிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். அதற்காகத்தான் தாய்லாந்து, பர்மா போன்ற இதர இடங்களிலும் பயிற்சி முகாம்கள் திறக்கப்படு கின்றன. எல்லா படங்களிலும் வாலிபர்களை விட இளம் பெண்கள் தான் அதிக உற்சாகத்துடன், எவ்வித சேவைக்கும் தயாரென மார்தட்டி முன்வருகின்றனர். ஆதலால் ஜான்சி ராணிப் படையொன்று தேவையாயிற்று. அவர்களுக்கு ராணுவப் பயிற்சியும், செஞ்சிலுவைப் பயிற்சியும் கொடுக்கப்படும். அப்படையில் மத்திய பயிற்சி முகாம் நாளை (22-ம் தேதி) திறக்கப்படும்.

படை திரட்டும் திட்டம் போலவே, பணம் திரட்டும் வேலையும் ராணுவத்துக்குத் தேவையான சாதனங்களைச் சேகரிக்கும் வேலையும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மத்தியதர கீழ்த்தர வகுப்பு மக்களிடையே காணப்பெறும் தியாக உணர்ச்சி, சுதந்திரம் விரும்புகின்ற இந்தியனுக்குப் பெருமையும் திருப்தியும் அளிப்பதாகும். பணம் படைத்தவர் களும் கொஞ்சம் கொஞ்சமாக முன் வந்து கொண்டிருக்கின்றனர். மற்றவர்களைப் போலவே இவர்களும், சேவை தியாகம் ஆகியவைகளில் பங்கு பெறுவரென்பது எனது நம்பிக்கை.

இந்தியச் சுதந்திரத்துக்காக சகல உதவிகளும், செய்ய வேண்டுமென்ற ஓர் வகையான பேராவல் இந்திய சமூகத்தில் குடி புகுந்து வருவதால், இன்னும் அதிக நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம். மக்கள் படும் துன்பம் மிதமிஞ்சியிருந்தாலும்,