பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நேதாஜியின் வீர உரைகள்

|| 95

சில மாதங்களாக உள் நாட்டு நிலைமை நமக்குச் சாதகமாகவே பலனளித்து வருகிறது. சில சமயம், சமாதானக் கருத்துக்களை அதிகார வர்க்கத்தினர் சிலர் வெளியிட்டு வந்தாலும், பிரிட்டிஷாரின் கொள்கை மட்டும் கல்லுப் பிள்ளையாராகவே இன்னும் இருக்கிறது.

நம் சிறந்த இந்தியத் தலைவர்கள் கணக்கற்ற தொண்டர்களுடனும் வீரர்களுடனும் சிறைச்சாலைகளில் அடைபட்டிருக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்திலே, ஏதேனும் கௌரவக் குறைவான சமரசத்துக்கு, வீண் முயற்சிகளைப் பல வழிகளிலும் செய்யலாம். இது ஒன்று தவிர, வேறெவ்வித மாறுதலும் உள்நாட்டில் ஏற்படுவதற்கில்லை. இந்தியாவின் பல பாகங் களிலும் வியாபித்திருக்கும் அரசியல் கொந்தளிப்பை, வங்கப் பஞ்சம் அதி தீவிரமாக்கியிருக்கிறது. இந்தப் பஞ்சத்துக்குக் காரணம், பிரிட்டிஷார் தங்கள் போருக்காக, இந்தியாவி விளைபொருள்களையும், மூலப்பொருள்களையும் நான்கு ஆண்டுகளாக அள்ளிச் சென்றதுதான். இதில் சிறிதும் சந்தேகமில்லை. இந்தப் பஞ்சத்தைத் தீர்க்க, ஒரு லட்சம் டன் அரிசியை நம் கழகத்தின் சார்பில் அளிப்பதாகக் கூறினேன். மறுத்தது மட்டுமல்ல; நம்மைக் கேலியும் செய்யத் தலைப்பட்டனர். கல்கத்தா கார்ப்பரேஷன் போன்ற பொது நிலையங்கள் “வறுமையால் வாடும் லட்சக்கணக்கான மக்களுக்கு உணவுப் பொருள் அனுப்புங்கள்” என்று பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டுக்கும் விடுத்த வேண்டுகோள்களெல்லாம் குப்பைத் தொட்டிகளில் போடப்பட்டன. இந் நிலைமையில் 'புரட்சியை வளர்ப்பது பட்டினிதான்' என்ற பாடத்தைக் கற்றுக் கொண்டு விட்டோம்.

வட ஆபிரிக்காவிலும் இத்தாலியிலும் நம் எதிரிகள் சிறு சிறு வெற்றி காண்பதற்கு முன்பிருந்த உலக நிலைமை, இன்றும் நமக்குச் சாதகமாகவே தான் இருக்கிறது. இந்த நிலைமையை,நம் தாய்நாட்டிலுள்ளவர்களும் நன்கு உணர்த்திருக்கின்றனர். உலகத்தில் என்ன மாறுதல் நேர்ந்தாலும் நம் சுதந்திரக் கழகமும் ராணுவமும் சம்பந்தப்பட்ட மட்டில், போரிட்டு வெற்றி