நேதாஜியின் வீர உரைகள் ——————————————— |
|| 97 |
துறைக்கும் வேண்டிய உதவிகளைச் செய்வதாக வாக்குறுதியும் தந்திருக்கின்றனர்.
நம்மை எதிர் நோக்கியிருக்கும் போருக்கும், அதன் பின் தேவையாகும் புனருத்தாரண வேலைகளுக்கும் வேண்டிய முன்னேற்பாடுகள் அனைத்தையும் நாம் செய்து கொண்டிருக்கிறோமென்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். பிரிட்டிஷாரையும் அவர்கள் துணைவர்களையும் நம் நாட்டி லிருந்து வெளியேற்றிய பின், நம் தாய் நாட்டின் நிலைமை எப்படியிருக்குமென்பதை முன்கூட்டியே நாம் தெரிந்து கொள்ளலாம். அதை உத்தேசித்துத்தான், “புனருத்தாரண இலாகா' வொன்றை நம் தலைமைக் காரியாலயத்தில் புகுத்தியுள்ளேன். இந்த இலாகாவும் தனது கடமை பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. அதற்கான பயிற்சிகள், ராணுவ நடவடிக் நடவடிக்கைகளோடு சேர்த்து ராடு சேர்த்து ஏக காலத்தில் அளிக்கப்படுகின்றன. சுருங்கக் கூறினால், எதிர்நோக்கியிருக்கும் போர், பின்னர் செய்ய வேண்டிய வேலைகள் ஆகியவைகளுக் கான ஏற்பாடுகள் யாவையும் தயாரித்துக் கொண்டேயிருக்கிறோம். எப்படிப் பார்த்தாலும், நமது போரின் அடுத்த கட்டம் மிகச் சமீபித்து விட்டதென்பதில் சந்தேகமில்லை.
கிழக்காசியாவிலுள்ள இந்தியர்கள், சிறப்பாக இந்திய தேசிய ராணுவ வீரர்கள், இந்திய எல்லைதாண்டி விடுதலைப் போரை நடத்தும் நந்நாளுக்காகக் காத்திருக்கின்றனர். அதற்குமுன் ஒரு சில அரசியல் திட்டங்களை நாம் வகுத்துவிட வேண்டும். உதாரணமாக, ஆஸாத் ஹிந்த் (சுதந்திர இந்திய) தற்காலிக சர்க்காரை அமைத்து அதன் தலைமையில் நமது போரைத் தொடங்க வேண்டும். அப்படி ஓர் அரசாங்கத்தை அமைத்து விட்டால், உலக முழுதுமுள்ள இந்தியர்களிடையே ஒருவிதச் சிறந்த உத்வேகததையும் பலனையும் காணலாம். அத்துடன், நமது போரில் அவர்களுக்கு மகத்தான வீரா வேசமும் சக்தியும் தோன்றும். உண்மையாகவே, எல்லோரும் ஆஸாத் ஹிந்த் தற்காலிக சர்க்காரின் ஆரம்ப தினத்தை அளவிறந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுதான்