பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. தற்காலிக சர்க்கார் பிரகடனம்

(21-10-43இல் கிழக்காசிய சுதந்திரக் கழக மகாநாட்டின் போது, பிற்பகல் 4-15 மணிக்கு நேதாஜி வெளியிட்ட, ஆஸாத் ஹிந்த் (சுதந்திர இந்திய) தற்காலி சர்க்கார் அமைப்பு பற்றிய பிரகடனம்)

பிரிட்டிஷாரால் 1757-இல் இந்திய மகாஜனங்கள் முதன் முதலாகத் தோல்வியுற்றனர் வங்காளத்தில். அதன் பிறகு, இழந்த விடுதலையைத் திரும்பப் பெற நூறு ஆண்டுகளாகக் கடும்போர் நடைபெற்றது. அக்காலத்தில் நம் மக்கள் செய்த தியாகமும் வீரச்செயல்களும் மயிர் சிலிர்க்கச் செய்கின்றவை யாகும். அந்தச் சரித்திர ஏடுகளில், வங்கத்தைச் சேர்ந்த் சுராஜு தௌலா, மோகன்லால்; தென்னிந்தியாவைச் சேர்ந்த அப்பா சாஹிப் பான்ஸ்லே, பீஷ்வா பாஜிராவ், அதாரிவாலா ஆகிய இணையற்ற வீரர்களும்; கடைசியாக வீரத்தீரத்தில் யாருக்கும் இளைப்பில்லாத ஜான்ஸிராணி இலட்சுமி பாய், அஞ்சா நெஞ்சம் படைத்த தந்தியோதோபி, மகாராஜா குனவர்சிங், நானாசாகிப் முதலிய வீரர்களும் சிரஞ்சீவியாக இடம் பெற்றிருக்கின்றனர்.

பிரிட்டிஷார் நமது நாட்டுக்கு, எவ்வாறு பிற்காலத்தில் அபாயகரமான-அஷ்டமத்துச் சனியனாக விளங்குவரென்பதை நம் முன்னோர்கள் முதலில் உணராதது துரதிஷ்டமேயாகும். ஆதலால், அவர்களை இந்திய எல்லையிலிருந்து விரட்டியடிக்க ஓர் ஐக்கிய முன்னணியை அமைக்கவில்லை. நாள் செல்லச் செல்ல பிரிட்டிஷாரின் உண்மைச் சொரூபம் மனப்பான்மையும் வெளியாகவே, போர்க்கோலம் பூண்டனர் இந்தியமக்கள். பகதூர்ஷா தலைமையில் 1857-இல் தங்களது கடைசிப் போராட்டத்தை நன்றாக நடத்தினார்கள். அந்தப் போரில் ஆரம்ப வெற்றிகள் பல கிடைத்தன. ஆயினும், காலச்சக்கரச்