நேதாஜியின் வீர உரைகள் ——————————————— |
|| 103 |
உணர்ந்தனர். இன்று எல்லோரும் ஒரே குரலில் பேசி, பொது இலட்சியத்தையடைய வீறு கொண்டிருக் கின்றனர்.
1937 முதல் 1939 வரை எட்டு மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரி சபைகள் அமைத்துப் பொறுப்பேற்று நடத்தித் தங்கள் நிர்வாகத் திறமையையும் நிரூபித்தனர் இந்தியர்கள். இந்த உலக மகா யுத்த ஆரம்பத்திலேயே விடுதலைக்காக இறுதிப் போராட்டத்தை நடத்த நம் நாடு வல்லமை கொண்டிருந்தது. இப்பொழுதோ, ஜெர்மனியும் அதன் நேச நாடுகளும் நமது பரம எதிரிக்குத் தலை தெறிக்கும்படி அடி கொடுத்திருக்கின்றன. கிழக்காசியாவில் நிப்பொன், அதன் நேச நாடுகளது உதவியுடன் உதைத்து வீழ்த்தியிருக்கிறது. ஆகவே, இயற்கை அன்னையின் பேரருட் கருணையால் இந்திய மக்களின் தேசீய விமோசனத் துக்கு, கிடைப்பதற்கரியதோர் அற்புதத் தருணம் இன்று வாய்க்கப் பெற்றிருக்கிறது. கடல் கடந்த இந்தியர்களும், முதன் முதலாக ஒன்றுபட்டு ஒரே ஸ்தாபனத்தின் கீழ் போருக்கு தயாராக விளங்குவதும் அதிர்ஷ்ட வசமேயாகும். சிந்தனை யாலும், உணர்ச்சியாலும், கடல் கடந்த இந்தியர்களும் தாய் நாட்டிலுள்ளவர்களும் சம நிலையில் முன்னேறிக் கொண்டிருக் கின்றனர். குறிப்பாக இங்கு இருபது லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் ‘பரிபூரணத் தியாகம்' எனும் மின்சார அரண் வகுத்து, தரும யுத்தத்தில் ஈடுபடத் தோள் கொட்டி நிற்கின்றனர். இவர்களுக்கு முன்னணியாக இந்தியச் சுதந்திர ராணுவம் கச்சைகட்டி முரசமைந்து, கட்டுப்பாடாக 'டில்லி நோக்கி முன்னேறுவோம்' என ஆர்ப்பரிக்கின்றது.
பிரிட்டிஷ் ஆட்சியின் நயவஞ்சகமும் ஒழுங்கீனமும் அதன் மீது இந்தியருக்குக் கோபாவேசத்தை உண்டாக்கிவிட்டது. இந்தியரைப் பல வகையிலும் சுரண்டிக் கொள்ளையடித்துச் சூறையாடி, பட்டினிபோட்டு மடிய வைத்ததால், இந்தியர்கள் வெறுப்பும் தீராப் பகைமையும் கொண்டிருக்கின்றனர். குற்றுயிரும் கொலையுயிருமாக இருக்கின்றனர் இந்தியர்கள். இந்த சோகம் நிறைந்த ஆட்சியின் கடைசிச் சின்னங்களை அழித்துச் சாம்பலாக்க, ஓர் சிறு நெருப்புப் பொறிதான் தேவை. அந்த ஈமத் தீயைக் கொளுத்தும் பொறுப்பு இந்தியத் தேசீய ராணுவத்தைச் சார்ந்திருக்கிறது. அதற்குத் தாய் நாட்டிலுள்ள