பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. ஆம்; இந்தியா அளிக்கும்!

(சிங்கப்பூரில் 22.10.43இல் மாலை 5 மணிக்கு ஜான்ஸி ராணிப்படைப் பயிற்சி முகாமை நேதாஜி திறந்துவைத்து நிகழ்த்திய சொற்பெருக்கு)

சகோதரிகளே!

ஜான்சி ராணிப்படைப் பயிற்சி முகாமின் ஆரம்ப விழா, நமது இயக்கச் சரித்திரத்திலிலேயே புதுமையும் முக்கியத்துவமும் கொண்டதாகும். நவ இந்தியாவை உருவாக்கும் வேலையில் நாம் ஈடுபட்டிருக்கின்றோம். அதில் நம் பெண்களும் பங்கு கொண்டிருப்பது மிக மிகப் பொருத்தமானதே. நமது வேலை பிரச்சார சூழ்ச்சியல்ல வென்பதை உங்கள் மனதில் நன்றாகப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். நமது பண்டைப் பெருமையும் முன்னோர் திறமையும் உன்னதமானவை. அந்தப் பரம்பரைப் பெருமையில்லா விட்டால், ஜான்ஸி ராணி போன்ற பெண்மணிகளுக்கு இந்தியா பிறப்பிடமாயிருந்திருக்காது.

புராதன இந்தியாவில் மைத்திரேயி போன்ற வெண்மணிகள் தோன்றியது போலவே, பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் வேரூன்று முன்பு, மகாராட்டிரத்தில் அகல்யா பாயும், வங்கத்தில் பவானி ராணி ரஜியாபீகம் - நூர்ஜஹான் ஆகியோரும் சர்க்கார் நிர்வாகங்களையேற்று நீதி செலுத்திப் பெருமையுற்றனர். மேதைகள் பிறப்பதற்கேற்ற அவ்வளவு வளப்பங் கொண்டிருக்கும் இந்தியா, என்றும்போல் உலகம் அதிசயிக்கத் தகுந்த வீரப் பெண்மணிகளைத் தோற்றுவிக்கச் சிறிதும் சளைக்காதென்பது எனது திட நம்பிக்கை.

இந்தியாவில் புதிய அரசியல் வானம் 1921-ல் தென்பட்டதும், ஆயிரக்கணக்கான, இல்லை - லட்சக்கணக்கான பெண்கள்