பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
116 ||

அப்பாத்துரையம் - 6



திறந்துதானிருக்கிறது. இதுதான் ஷோனானிலிருந்து நான் விடும் கடைசி வேண்டுகோள்.

சுதந்திர இந்தியத் தற்காலிக சர்க்காரின் பிரதிநிதியாக உங்கள் முன் நிற்கும் நான், கையேந்திப்ப பிச்சை கேட்க வரவில்லை; உங்கள் உயிர் உடைமையனைத்தையும் ஏகபோகமாக எடுத்துக் கொள்ளும் உரிமையுடனேயேதான் இங்கு நிற்கிறேன். இது வீண் பயமுறுத்தலல்ல; அந்த வழக்கம் என் அகராதியிலேயே கிடையாது. என் விரோதிகள் கூட அதனை நன்கு அறிவார்கள். தாமாக முன் வந்து உதவுவதற்குச் சந்தர்ப்பம் அளிக்கவில்லையே என்ற குறை இருக்கக்கூடாது. நீங்களாக முன்வரா விட்டால், கையைக் கட்டிக்கொண்டு சும்மாயிருக்கவும் முடியாது.

ஒன்று - நண்பர்களாக இருங்கள்; அல்லது- விரோதியாகி விடுங்கள். பிரிட்டிஷார் மட்டுமல்ல எங்கள் விரோதி; பிரிட்டிஷாருக்கு உதவி செய்பவர்கள்,எங்கள் இலட்சியத்துக்கு உதவ மறுப்பவர்கள் ஆகியோரும் எங்கள் விரோதிகளே. ஏனெனில், இன்று 'இருப்பதா - இறப்பதா' என்பதில் முடிவு காணும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.

தாமாகவே முன்வந்து நம் ராணுவத்தில் பயிற்சி பெறுபவர்களின் உணர்ச்சிப் பெருக்கைப் பாருங்கள். எத்தனைபேர் உயிரோடு சுதந்திர இந்தியாவைக் காண்பார் களென்பது அவர்களுக்கே தெரியாது. பின்வாங்கும் திட்டமே அவர்களுக்கில்லை. அந்தத் திட்டம் வேவலுக்கும் அவரது ராணுவத்துக்கும் மட்டுமே ஒதுக்கப்பெற்றிருக்கிறது. உடம்பில் கடைசித் துளி இரத்தம் இருக்கும் வரைப் போரிடுவதும், வெற்றிக் கொடியுடன் சுதந்திர இந்தியாவில் நுழைவது, அல்லது வழியிலே செத்து மடிவது என்பதுவுமே நமது ராணுவத்தின் இலட்சியம்.

நிலைமை இப்படியிருக்க, என்னைப் பார்த்துச் சில பணக்காரர்கள் கேட்கின்றனர், சர்வாம்சப் படை திரட்ட லென்பது, ‘10 சதவிகிதமாக 5 சதவிகிதமா' என்று. அவர்களை ஒன்று கேட்கின்றேன்? நமது போர் வீரர்கள், போர்க்களத்தில் 10 சதவிவகிதம் போர் செய்து உடம்பிலுள்ள இரத்தத்திலும் 10