134 || |
அப்பாத்துரையம் - 6 ——————————————— |
தூபம் போடுகின்றனர். மகாத்மாஜி! 'சுதந்திர இந்தியா, சீன ஜப்பான் நல்லுறவுக்கு உழைக்கும்' என்று தாங்கள் நினைத்தது முற்றிலும் சரியே. இந்தியாவின் விடுதலை, மடமையாகத் தவறு செய்து கொண்டிருக்கும் சுங்கிங்கின் கண்களைத் திறந்துவிடும். அதன்மூலம், சீனாவுக்கு ஜப்பானுக்கு மிடையே ஓர் கௌரவமான நல்லுறவும் தானே தோன்றிவிடும். நான் கிழக்காசியாவுக்கு வந்ததும் சீனாவுக்குச் சென்றேன். சீனாவின் தேவைகளை இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. சுங்கிங்கில் சர்வாதிகாரம் ஆட்சி செய்வதைக் கண்டேன். நேர்மையான காரியங்களுக்குச் சுங்கிங் சீனாவோ, கலப்பற்ற ஆங்கிலேய-அமெரிக்கச் செல்வாக் குடன் சர்வாதிகாரத்துக்கு உட்பட்டிருக்கிறது. துரதிர்ஷ்ட வசமாக சுங்கிங் அதிகாரிகளை ஏமாற்றுவதற்கான வசதிகளை ஆங்கிலேய அமெரிக்கர்கள் பெற்று விட்டார்கள். ஜப்பான் தோற்கடிக்கப்பட்டு சுங்கிங் சீனாவின் அதிகாரம் ஆசியா முழுதும் பரவுமென்று அவர்கள் நம்பும்படி செய்துவிட்டார்கள். உண்மையென்னவென்றால், எப்படியேனும் ஜப்பான் தோற்கடிக்கப்படுமானால், சீனா முழுமையும் அன்னிய அமெரிக்கரின் கட்டுப்பாட்டின்கீழ் வந்து விடுவது நிச்சயம். அப்படி நேர்ந்தால், சீனாவை மட்டுமல்ல, ஆசியா முழுமையுமே அந்தச் சோக மேகம் கௌவிக் கொள்ளும்.
சுங்கிங் சர்க்காரின் பிரச்சாரர்கள் இந்தியாவிலிருந்து கொண்டு, இந்தியாவின் அனுதாபத்தைப் பெற முயற்சிப்பது பற்றி எனக்குச் சிறிது தெரியும். வால் தெரு (Wall Street) விலும் லம்பார்டு தெரு (Lombard Street) விலும் தன்னை ஈடுவைத்திக்கும் அந்த சுங்கிங், (சீனா பற்றிய புதுக்கொள்கையை ஜப்பான் பறைசாற்றிய பின்) இந்தியர்களின் அனுதாபத்தை பெற எக்காலத்திலும் லாயக்கில்லையென்று தான் கௌரமாகச் சொல்ல விரும்புகிறேன்.
மகாத்மாஜி!
வெறும் வாக்குறுதிகளில் இந்தியர்கள் எவ்வளவு நம்பிக்கையுள்ளவர் களென்பது, எல்லோரையும்விட