நேதாஜியின் வீர உரைகள் ——————————————— |
|| 135 |
உங்களுக்கே நன்றாகத் தெரியும். ஜப்பானின் பிரகடனமும் வெறும் வாக்குறுதியாகவேயிருந்தால், என் சகோதரர்களின் அவநம்பிக்கைக்கு நானே தான் கடைசி மனிதனாக இருப்பேன். ஆனால், இந்த உலக மகாயுத்தத்தின் நடுவே, பிலிப்பைன், பர்மா, தேசீயச் சீனா போன்ற நாடுகளில் ஜப்பான் செய்திருக்கும் புரட்சிகரமான மாற்றங்களை என் இரு கண்களாலும் கண்டுவிட்டேன். ஜப்பான், ஜெனரல் டோஜோவை பிரதம மந்திரியாகவும் தலைவராகவும் பெற்றிருக்கிறது. வாக்கிலும் செயலிலும் உறுதி பிறழாத உத்தமரென, டோஜோவை சாதாரண சிப்பாய் முதல் உயர்தர அதிகாரிகள் வரை ஏகமனதாகப் போற்றிப் புகழுகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரையில், தனக்கிருக்கும் அந்தரங்க சுத்தியை ஜப்பான் அதன் செயல்மூலம் நிரூபித்து விட்டதென நான் உறுதியாகச் சொல்வேன். இந்தியப் பிரச்னையில், ஜப்பானியர் சுயநலம் கொண்டிருக்கின்றன ரென்று மக்கள் ஒரு சமயம் சொன்னார்கள். அப்படியானால், நமது தற்காலிக சர்க்காரை எதற்காக அவர்கள் அங்கீரிக்க வேண்டும்? அந்தமானையும், நிக்கோபர் தீவுகளையும் சுதந்திர இந்தியத் தற்காலிக சர்க்காரிடம் ஒப்படைக்க அது முடிவு செய்ததேன்? அவ்விரு தீவுகளுக்கும் தலைமை அதிகாரியாக இந்தியர் ஒருவர் இப்பொழுது போர்ட் பிளையரில் இருப்பதேன்? கிழக்காசியாவில் இந்திய சுதந்திரப் போருக்காக, இந்தியருக்கு நிபந்தனையற்ற உதவிகளை அது அளித்து வருவதேன்? ஜப்பானின் அந்தரங்க சுத்தியையும், அதன்மூலம் கிடைக்கும் பேருதவிகளையும் கண்டுகளிக்கும் இந்தியர்கள், கிழக்காசியா முழுதும் இருக்கிறார்கள். ஜப்பான் மீது அவநம்பிக்கை கொண்டிருந்தால், கிழக்காசியாவிலுள்ள 30 லட்சம் இந்தியர்களும் ஒருமுகமான கூட்டுறவுக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார்களா? ஒரு தனி மனிதனை ஏமாற்றவோ அல்லது தன் வயப்படுத்தவோ ஒருவனால் முடியும். ஆனால், கிழக்காசியாவில் சிதறிக் கிடக்கும் 30 லட்சம் இந்தியர்களையும் பலாத்காரமாய் இணைக்க எவராலும் முடியாதே!