நேதாஜியின் வீர உரைகள் ——————————————— |
|| 137 |
தலைமையை நிர்ணயிப்பதற்கும், இந்த சர்க்கார் பக்கபலமாக இருக்கும்.
மகாத்மாஜி!
நானும் என்னுடன் ஒத்துழைக்கும் எல்லா இந்தியர்களும், இந்திய மகாஜனங்களின் ஊழியர்களென்பதை உங்களுக்கு உறுதி கூறுகிறேன். எங்கள் முயற்சியிலே நாங்கள் அனுபவிக்கும் கஷ்ட நஷ்டங்களுக்கும் தியாகங்களுக்கும் பரிசாக விழைவது நம் தாய்நாட்டின் விடுதலை யொன்றேயாகும். இந்தியா சுதந்திரமடைந்ததும், அரசியல் துறையிலிருந்தே விலகிவிட வேண்டுமென்று கருதுபவர்கள் பலர் எம்முடன் இருக்கிறார்கள். பாக்கியுள்ளவர்கள், சுதந்திர இந்தியாவில் எவ்வளவு சாதாரண வேலையாக இருந்தாலும் அதனை ஏற்று நடத்துவதில் திருப்தியடைபவர்களாகவே இருக்கின்றனர். 'பிரிட்டிஷ் ஆட்சியில் உயர்தரப் பதவி வகிப்பதைவிட சுதந்திர இந்தியாவில் தோட்டி வேலை பார்ப்பதே மேல்' என்ற உணர்ச்சியைப் பெற்றுவிட்டனர் இங்குள்ளவர்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இருக்கின்றன ரென்பதையும் இவர்கள் நன்கு அறிவார்கள்.
கடைசி ஆங்கிலேயன் இந்திய மண்ணிலிருந்து வெளியேற்றப்படும் வரை ஜப்பானிடமிருந்து நமக்கு எவ்வளவு உதவி தேவைப்படுமென்பது, தாயகத்திலிருந்து கிடைக்கப் பெறும் கூட்டுறவின் அளவைப் பொறுத்திருக்கிறது. ஜப்பான், அதன் உதவியை நமக்கு அளிக்கத் தானாக முன்வரவில்லை; இந்தியர்கள் தாங்களாகவே முன்னேறி விடுதலை பெற்று விட்டால், ஜப்பான் சந்தோஷத்தையே அடையும். பல நாடுகளின் உதவியை எதிர்பார்த்து நிற்கும் பிரிட்டன் மீதும் அமெரிக்கா மீதும் ஜப்பான் போர்ப் பிரகடனம் செய்த பின்னர்தான், ஜப்பானின் உதவியை நாமே விரும்பினோம். தாயகத்திலிருந்து எதிர்பார்க்கும் உதவி எவ்வளவு அதிகமாகப் பெருகுகிறதோ, அவ்வளவுக்கு ஜப்பானியரிடமிருந்து எதிர்பார்க்கும் உதவி குறையுமென்று நம்புகிறேன். "வெள்ளையனே வெளியேறு" என்ற தங்கள் தீர்மானத்துக்கு பிரிட்டிஷ் சர்க்கார் மரியாதை செய்தாலும் சரி, வேறெந்த