பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. ஐரோப்பாவைப் பாருங்கள்!

(இரங்கூனிலிருந்து 8.7.44இல் வானொலி மூலம், நேதாஜி இந்தியர்களுக்குத் தெளிவுபடுத்தித் தந்த சாசனம்)

நண்பர்களே! தயாகத்தார்களே!

தற்கால ஐரோப்பாவின் நிலைமை, இந்தியாவுக்கும் சுதந்திரப் போருக்குமுள்ள விசேடக் குறிப்புகள், ஆகியன பற்றி இன்று உங்களிடம் பேசப் போகிறேன். நான் சொல்வதெல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்களேயன்றி வேறெவருடையனவு மன்று. என்னால் அளவிடப் பட்டுக் கூறப்படும் உண்மை நிலைகளை, நீங்களே விரிவுபடுத்தி உண்மையைத் தெரிந்துகொள்ள உதவுமென நம்புகிறேன். அரசியல் அல்லது ராணுவம் இவைகளில் ஏதேனும் ஒன்றுபற்றி ஆராய்ச்சி செய்தால், நமக்குத் தெரியாமலே சாதகமான எண்ணங்கள் தோன்றி ஆபத்தான நிலைமைக்கு வந்து விடுகிறோம். தனியொருவனுடைய ஆசையின் விளைவாக வெளிவரும் தீர்ப்பு உண்மையாக இருக்கவும் முடியாது. ஆனால் ஐரோப்பிய நிலைமைபற்றிய எனது ஆராய்ச்சியில், அத்தகைய ஆசையின் விளைவுகளுக்கு நான் சிறிதும் இடம் கொடுக்கவில்லை. ஐரோப்பாவின் நிலைமையிலிருந்து இந்தியாவின் நிலைமை, சுதந்திர விஷயத்தில் மாறுபட்டதேயென்பதை உணர்ந்திருக்கிறேன். ஐரோப்பாவில் என்ன நேர்ந்தாலும், இந்தியர்கள் அவர்களது சுதந்திரத்தைப் பெற முடியும்; பெற்றே தீர்வார்கள் என்பது எனது தீர்ப்பு.

சென்ற உலக மகாயுத்தத்தில் நேசநாடுகள் வெற்றி பெற்றதும் ஜெர்மனி தோல்வியுற்றதும் ஏன்? எப்படி? என்பதைப் பற்றிய உண்மைகளே இப்போதைய ஆராய்ச்சிக்கு அஸ்தி வாரம். அந்த யுத்த முடிவுக்கு இரண்டு முக்கிய காரணங்கள்: சென்ற யுத்தத்தின் போது, பிரஞ்சு மக்கள் தங்கள் சொந்த நலனுக்காக தம் சொந்த வீடுவாசலுக்காகவும் போரிடுவதாக உணர்ச்சி