பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
144 ||

அப்பாத்துரையம் - 6



பிரிட்டிஷார் தயாராக இருக்கிறார் களென்பது கண்கூடு. இந்தக் காரணத்தால்தான் இந்தியாவின் சுதந்திரத்தை பிரிட்டன் மறுப்பதும், இந்தியச் சுதந்திரப் பிரச்சினைக்கு பிரிட்டனை வற்புறுத்த அமெரிக்கா பின்வாங்குவதும். எனவே யுத்தம் ஒழிந்ததும், இப்பொழுது தனக்கு நேர்ந்துள்ள நஷ்டங்களை ஈடு செய்ய, இந்தியாவைக் கடுமையாக மிருகத்தனமாகக் கசக்கிப் பிழிவதென பிரிட்டன் திட்டமிட்டிருக்கிறது. எப்படியும் யுத்தம் முடியும்போது, இந்திய தேசீய இயக்கத்துக்குச் சமாதி கட்டிவிடுவதென லண்டனிலே திட்டங்கள் தயாராகிவிட்டன.

அமெரிக்காவின் பரிபூரண உதவியும் ஒத்துழைப்பும் கொண்ட நேச நாட்டார், 1942 நவம்பரில் வட ஆப்ரிக்காவிலும் கடைசியாக இத்தாலியிலும் வெற்றி பெற முடிந்தது. அமெரிக்க அரசியல் தந்திரம் மட்டும் இல்லாது போனால், நேச நாட்டாருக்குப் பிரஞ்சு அட்மிரல் டார்லன் கட்சியின் உதவி கிடைத்திராவிட்டால், வட ஆப்பிரிக்கப் போரில் நேச நாட்டார் வெற்றியடைவதென்பது சந்தேகந்தான். இருந்தாலும், அட்மிரல் டார்லன் கட்சியாருக்கு எதிராக, பிரிட்டிஷார் இன்னும் ஜெனரல் டீகாலேயைப் புகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றனர். அது சம்பந்தமாக பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் எவ்வித ஒப்பந்தமும் ஏற்படவில்லை. பிரிட்டனின் முயற்சியால் அட்மிரல் டார்லன், ஜெனரல் ஜிராட் ஆகியோர் களுக்கு எதிராக, ஜெனரல் டீகாலேயிக்கு வெற்றி கிடைத்திருக் கிறது. ஆங்கில - அமெரிக்க ஒப்பந்த மின்மையால், பிரஞ்சு வட ஆப்ரிக்காவில் ருஷ்யாவுக்கு வெற்றி வெற்றி கிடைத்து, அதன் ஆதிக்கமும் ஓங்கியிருக்கிறது. பிரான்ஸின் விடுதலை யுத்தம் என்று சொல்லப்படுகிறதேயாயினும், ஜெனரல் டீகாலேயிக்கு பிரான்ஸில் எவ்விதப் பதவியும் கொடுப்பதற்கு நேச தேசத்தளபதியான அமெரிக்க ஜெனரல் ஈசன் ஹோவர் மனமொப்பவில்லை. பிரஞ்சு நாட்டிலே ஏதேனும் ஒரு பாகத்தை நேசத் துரப்புகள் கைப்பற்றினால்கூட, அப்பகுதி டீகாலே வசம் ஒப்புவிக்கப்படாமல் நேச நாட்டு ராணுவத்தின் வசமேதானிருக்கும்,