நேதாஜியின் வீர உரைகள் ——————————————— |
|| 145 |
பிரிட்டன், அமெரிக்கா, ருஷ்யா இம் மூன்று தேசத்துக்குமிடையே ஐரோப்பியப் பிரச்னைமீது எவ்வித ஒப்பந்தமும் ஏற்படவில்லையென்பதும் உலக முழுவம் தெரியும். இம்மூன்று சர்க்கார்களுக்கும் உள்ளூற ஒற்றுமையுணர்ச்சியோ ஒன்றுபட்ட கருத்தோ இல்லையெனினும், பொது விரோதத் தின் காரணமாக நேசம் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரி நேசம், யுத்தத்தின் வெற்றியையோ ஏற்படுகின்ற பலனையோ உரிமையாக்காது. சென்ற மகா யுத்தத்தில் 1918-இல் பிரிட்டன் – அமெரிக்கா பெல்ஜியம்-பிரான்சு ஆகியன அன்றைய நேசதேசத் தலைமைத் தளபதி மார்ஷல் போக் தலைமையில் ஒன்றுபட்டிருந்த நிலைமைக்கும் இன்றைய நேசநாட்டாரின் நிலைமைக்கும் மிகுந்த வேற்றுமை காணப்படுகின்றது. ஐரோப்பாவின் நிலப்பரப்பில் நேசநாட்டினர் பிரவேசிப்பதால் வெற்றி வந்துவிட்டதெனக் கூறமுடியாது. ஏனெனில் ருஷ்யாவிலே புகுந்து மாஸ்கோவைக் கைப்பற்றும் பொருட்டு திட்டமிட்ட நெப்போலியனின் வெற்றியைப் போல் அவ்வளவு போலியானதேயாகும் அந்த வெற்றி.ஜெர்மானியர்கள் இங்கிலாந்திலே பிரவேசித்திருந்தால், நான் நிச்சயமாகச் சொல்வேன் - பிரிட்டிஷார், சிங்கம் போல் போரிட்டிருப்பார் களென்று. ஆனால் இப்பொழுது அவர்கள் தேசத்துக்கு வெளியே தொலை தூரத்தில் யுத்தம் நடப்பதால், அவர்களால் அவ்வளவு ஆண்மையுடன் சண்டை செய்யவும் முடியாது; செய்யவும் மாட்டார்கள். ராணுவம் என்பது உயிரற்ற இயந்திரமல்ல; மனிதப் பிராணிகளைக் கொண்டதுதான் ராணுவம். அம் மனிதர்களுக்கும் மனித உணர்ச்சிகள் உண்டு; எங்கெங்கே எப்படியெப்படிப் போரிட வேண்டுமென்பதும் அவர்களுக்குத் தெரியும்.
அனுபவமில்லாத இளம் வயதுடைய நெப்போலியன் தலைமையில், பயிற்சியற்ற பிரஞ்சு ராணுவம் திறமையைாகப் போரிட்டு ஐரோப்பா முழுதிலும் பெரும் வெற்றியைச் சம்பாதித்து. உலக எதிர்ப்பிலிருந்து புரட்சியையும் அதன் பலனையும் பாதுகாக்கும் பொருட்டு, பிரான்ஸ் தேசம் முழுமையுமே போரிட்டது. ஐரோப்பாவை வெற்றிகண்டு அதன் சக்கிரவர்த்தியாக நெப்போலியன் விளங்கியும், அதே ராணுவம் யுத்தத்தால் அனுபவமிருந்திருந்தும் எதிரிகளல் இறுதியில்