பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நேதாஜியின் வீர உரைகள்

|| 149

துருக்கி பற்றிய மற்றொரு கேள்வியும் எழுகிறது. துருக்கி தனது பலம் முழுவதையும் நேச நாட்டுக்கு அர்ப்பணிக்கப் போவதாக, பிரிட்டிஷ் பிரச்சாரகர்கள் உலகத்தை ஏமாற்ற முயல்கின்றனர். இந்திய முஸ்லிம்களையும் பிரிட்டிஷ் அபிமானிகளாக்கி விடலாமென்பது இந்தப் பிரசாரகர்களின் நினைப்பு. நவீனத் துருக்கியைத் தெரிந்து கொண்டவன் எவனும் இந்தப் பிரச்சாரங்களை நம்பவே மாட்டான். துருக்கியிலே நேசதேச அபிமான வட்டாரங்கள் சில இருக்கின்றன. துருக்கியின் அங்காரா ஒலிபரப்பி, நேச தேச அபிமானத்துடன் முழங்குகின்றது; எனினும் இந்த யுத்தத்தில் எந்தக் கட்சியுடனாவது துருக்கி சேருமா வென்பதற்கு, எவ்வித ஆதாரமோ காரணமோ கிடையாது. அப்படியானால் துருக்கியின் நிலைமை என்ன? நடுநிலைமையாகவேதான் இருந்துவரும்.

ஆரம்பத்தில் நான் கூறியதுபோல், நம் எதிரிப் பிரச்சாரகர்கள் அமெரிக்காவின் யுத்த சாசன உற்பத்தி பற்றிப் பிரம்மாதமாகப் புகழ்ந்து கொண்டிருக்கின்றனர். நேச தேசத்தார்களின் மனோ உறுதியைப் பலப்டுத்துவதற்காகவே தான் அந்தப் பிரச்சாரம். ஆனால் அமெரிக்காவின் யுத்த உற்பத்திப் பெருக்கத்துக்கும் ஓர் எல்லையுண்டென்பதை நாம் மறந்துவிடலாகாது. அமெரிக்காவின் உற்பத்தி ஏற்கெனவே உச்சநிலையடைந்து விட்டதால் இனிமேல் அது குறைவு படுமேயன்றி, மேலும் பெருகுவதற்கு இடமில்லை. ஜெர்மனியை எடுத்துக் கொண்டால், விமானத் தாக்குதல்களின் காரணமாக அதன் உற்பத்தியில் எவ்வித தளர்ச்சியும் அங்கு காணப்படவில்லை; பல வகைகளில் முன்னேறியேயிருக்கிறது. ஆகையால், யுத்ததுக்குத் தேவையான எல்லாவற்றையும் உற்பத்தி செய்து கொள்ளும் வசதியை, ஜெர்மனி பெற்றிருக்கிறது.

இப்பொழுது ஐரோப்பிய நிலைமையைச் சுருக்கமாக அளவிட்டுக் கூறுகிறேன்:- கிழக்கு யுத்த முனையில் ருஷ்யர்களைத் தோற்கடிக்க ஜெர்மானியர்களால் முடியவில்லை; அதைப் போலவே ஜெர்மானியர்களைத் தோற்கடிக்க ருஷ்யர் களாலும் இயலவில்லை. சிறிது காலம் பொறுத்து மேற்கு ஐரோப்பாவில் ஜெர்மானியருக்குச் சாதகமான நிலைமை ஏற்படலாம். அப்பொழுது தான் பிரான்ஸிலிருந்து ஆங்கிலேய