150 || |
அப்பாத்துரையம் - 6 ——————————————— |
அமெரிக்கரைப் பின்னுக்குத் தள்ள ஜெர்மானியரால் முடியும். இத்தாலியின் தீபகற்பத்தைக் கடந்து வடஇத்தாலியில் நுழையும் போதுதான்,ஜெர்மானியர்கள் தங்கள் முழுப்பாதுகாப்பையும் அரண் செய்வார்கள். அந்த இடத்திலிருந்து ஜெர்மானியர்களை அப்புறப்படுத்த நேச தேசத்தாரால் முடியாது; அவ்வளவு மூர்க்கமான ஜெர்மன் எதிர்ப்பை அவர்கள் காண்பார்கள்.
இத்தாலியிலும், பிரான்ஸிலும் உள்ள போர் முனைகளை எடுத்துக் கொண்டால், நேசதேசத்தாரின் ஆத்மீக பலம் அமிழ்ந்து போவதுவரை ஜெர்மானியர்களின் பிடிவாத வேசம் தணியாதென்பது நிச்சயம். அன்றி, ஜெர்மானியரின் ஆத்மீகப் பலம் சிதறுண்டு விடுமென்று என்னால் நம்ப முடியவில்லை. ஆரம்பத்தில் ஜெர்மனிக்கு நேர்ந்த விமானத் தாக்குதல் ஜெர்மானியர்களின் பறக்கும் குண்டு விமானங்களால் முறியடிக்கப்பட்டுக் குறைவுபடவே, விமான பலத்தில் முன்னேறி விட்டனர் ஜெர்மானியர்கள். ஜெர்மானியர்களின் ஆத்ம பலத்துக்கும் வலிமைக்கும் இது வொன்றே போதிய சாட்சியாகும். அடுத்து வரும் சில மாதங்கள் ஜெர்மானியருக்கு ஆபத்து நிறைந்த நெருக்கடியையே கொடுக்கும். ஆனால் வெற்றியின் எல்லைக்கு பழையபடி ஜெர்மனி திரும்பிவிடும். இது என்னுடைய தீர்ப்பு. சென்ற யுத்தச் சமயம் நேர்ந்தது போல் இப்பொழுதும் ஜெர்மானியரின் ஆத்ம பலம் குழப்பமடைந்ததால் தான், எனது தீர்ப்பு பிரயோசனமற்றதாகும். ஆனால் அவ்வித நிகழ்ச்சிக்கான எவ்வித அறிகுறியையும் என்னால் காண முடியவில்லை. ருஷ்யாவில் மார்ஷல் ஸ்டாலின் செய்ததைப் போலவே, ஜெர்மனியிலும் உள்நாட்டு எதிர்ப்பு சக்திகள் அனைத்யுைம் சர்வாதிகாரி ஹிட்லர் முன்கூட்டியே ஒழித்துக் கட்டி பாதுகாப்பை அமைத்துள்ளார்.
இந்த ஐரோப்பிய யுத்தம் வெறும் ஆயுத பல யுத்தமல்ல; உணர்ச்சிப் பெருக்கும் சமநிலை கொண்டிருக்கிறது. உணர்ச்சிப் பெருக்கின் பலம் எவரிடம் அதிகமாகயிருக்கிறதோ அவர்களுக்குத்தான் வெற்றி. எதிரிகளின் சக்தியெல்லாம் இந்த நீண்ட ஐரோப்பியப் போரில் ஒருங்கு திரண்டு கட்டுப்பட்டிருக்கும் இந்த நேரம், இந்தியர்களுக்கு கிடைத்தற்கரிய உதவியை அளித்துள்ளது என்பதுதான், பரிசுத்த இந்தியக் கண்கொண்டு